திரையில் வெளியான நாள் முதலே அதிரடி Blockbuster படமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி Coming வீடியோ பாடல் Youtube-ல் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது.
தளபதி விஜயின் படங்களை குறித்த எந்த Update வெளிவந்தாலும், அதை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடுவது வழக்கமான விஷயமே. அந்த வகையில் lyric வீடியோ வெளியானதிலிருந்தே இணையத்தை கலக்கி வந்த வாத்தி Coming பாடலின் முழு வீடியோ பாடல் வெளியாகி 24 மணிநேரம் கூட ஆகாத நிலையில் Youtube-ல் இப்பாடலை #1 டிரெண்டிங்கில் அமர வைத்துள்ளனர் ரசிகர்கள்.
இப்பாடலில் Rockstar அனிருத்-ன் அட்டகாசமான இசையும், தளபதி விஜயின் வேற Level நடனமும் திரையரங்குகளை திருவிழா போல மாற்றியமைத்தது. இப்பாடலின் வீடியோ எப்போது வெளிவரும் என Youtube மீது விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சியாய் வாத்தி Coming வீடியோ நேற்று வெளிவந்தது.
இந்த வீடியோ வெளியாகி ஒரு நாள் கூட ஆகாத நிலையில், Youtube-ல் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட View-களை பெற்றுள்ளது. Professor JD-ஆக மாஸ்டர் படத்தில் வலம் வரும் தளபதி விஜய் தன் நண்பர்களுடனும், கல்லூரி மாணவர்களுடனும் இணைந்து Mass குத்து Dance ஆடும் பாடலே இந்த வாத்தி Coming. பாடல் தொடங்கியதிலிருந்து முடியும் வரை Full Energy உள்ள குத்து பாடலாக அமைந்ததே இப்பாடலின் மெகா ஹிட்டுக்கு காரணம் என்று சொல்லலாம்.
வாத்தி Coming பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.