இந்திய திரையுலகமே வெறித்தனமான waiting-ல் இருக்கும் வலிமை திரைப்படத்தின் Making வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தை குறித்த ஒவ்வொரு update வெளிவரும் போதும் சமூக வலைதளங்கள் அஜித் ரசிகர்களின் Control-க்கு வந்து விடுகிறது என்றே சொல்லலாம்.
அஜித்தை திரையில் காண வருடக்கணக்கில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு வலிமை திரைப்படம் நிச்சயம் ஒரு விருந்தாக அமையும். இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததற்குப் பின், அடுத்த Update வருவதற்கு காலதாமதம் ஆனதால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.
சமீப காலங்களில் இப்படத்தை குறித்த update-கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது. Motion Poster, First Look, 2 பாடல்கள். ஒரு Glimpse வீடியோ என Update-கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள Making வீடியோ ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.
வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் மார்க்கெட்டில் Mass Combo-வாக அறியப்படும் யுவன்-அஜித் கூட்டணி வலிமை திரைப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.
ஏற்கனவே வலிமை திரைப்படத்திலிருந்து வெளியான நாங்க வேற மாரி மற்றும் Mother Song ஆகிய பாடல்களில் யுவனின் இசை பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. மேலும் யுவனின் Background Score-ஐ திரையில் ரசிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.வெளியாகியுள்ள Making வீடியோவில் அஜித்தும், படக்குழுவினரும் ரசிகர்களை திருப்தி படுத்த எந்த அளவிற்கு உழைத்துள்ளார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
வலிமை திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
வலிமை திரைப்படத்தின் Making விடியோவை கீழே காணுங்கள்.