தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய Update தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வருடக்கணக்கில் Update-களுக்காக காத்திருந்த தல ரசிகர்களுக்கு First Look, Motion Poster, Single பாடல், ரிலீஸ் தேதி அறிவிப்பு என தொடர்ந்து Update-களை படக்குழுவினர் வாரி வழங்கி வருகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் 2022-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தல ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். படம் வெளியாக மூன்று மாதங்களே உள்ள நிலையில் டீசர், ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த Update-களும் வரிசையாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
H.வினோத் இயக்கும் வலிமை திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ஐயப்பா, யோகி பாபு, ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “நாங்க வேற மாறி” பாடல் தல ரசிகர்களின் மனதையும் Playlist-ஐயும் ஆட்சி செய்து வருகிறது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தல அஜித்தை திரையில் காண அவரது ரசிகர்கள் திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு வலிமை திரைப்படத்துடன் சேர்த்து வேறு என்னென்ன திரைப்படங்கள் வெளிவரும் என சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
வலிமை திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட ரிலீஸ் தேதி அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.