Cinema News Stories Trending

“நாங்க வேற மாரி” பாடல் நிகழ்த்திய வேற மாரி சாதனை !!!

தல அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தின் “நாங்க வேற மாரி” பாடலின் Lyric வீடியோ கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவந்தது. இப்பாடல் தற்போது Youtube-ல் ஒரு புதிய சாதனையை புரிந்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்களால் பெரிதளவில் பகிரப்பட்டு வந்தது. தல அஜித்தின் திரைப்படங்களை குறித்து எந்த Update வெளிவந்தாலும் அது சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தும்.

Image

அந்த வகையில் “நாங்க வேற மாரி” பாடல் இந்தியாவிலேயே வேகமாக ஒரு மில்லியன் Like-களை வாங்கிய Lyric வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் வலிமை திரைப்படத்தின் First Look Motion Poster அதிக Youtube பார்வைகளை பெற்ற Motion Poster என சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் Update-களுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்த ரசிகர்கள், ஒவ்வொரு Update வெளிவரும் போதும் அதை ஒரு புதிய சாதனையாக மாற்றி வருகின்றனர்.

இப்பாடலில் தல அஜித் அடிக்கடி கூறும் “வாழு வாழ விடு” எனும் வசனம் பாடல் வரிகளுள் அமைந்துள்ளது. ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைக்கும் “நாங்க வேற மாரி” பாடல் வலிமை திரைப்படத்தின் Intro பாடலாக இருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாங்க வேற மாரி பாடலின் Lyric வீடியோவை கீழே காணுங்கள்.

About the author

alex lew