பாடப்புத்தகங்களை படிப்பதைத் தாண்டி ஒவ்வொரு மாணவர்களுக்கும் இருக்கும் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவர பல்வேறு முயற்சிகளை பள்ளிகளும் பெற்றோர்களும் எடுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அப்படிப்பட்ட திறமைகளுள் ஒன்றான ஓவியத் திறமையை ஊக்குவித்து வெளிக்கொண்டுவரும் விதமாக ‘சூரியன் FM-ன் வர்ணஜாலம்’ கடந்த 13 வருடங்களாக நடந்து வந்தது.
இந்த கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்கு இந்த உலகமே தள்ளப்பட்ட போதும், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சூரியன் FM-ன் வர்ணஜாலம் டிஜிட்டல் வர்ணஜாலமாக உருவெடுத்தது.
சென்ற ஆண்டு மக்களாகிய நீங்கள் கொடுத்த அமோக ஆதரவுக்கு ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தை ஈடாகாது. கடந்த ஆண்டை விட மேலும் பிரம்மாண்டமாய் டிஜிட்டல் வர்ணஜாலம் தனது இரண்டாவது அத்தியாயத்தை தொடங்கவுள்ளது.
பள்ளி மாணவர்களின் வகுப்பு வாரியாக பிரிவுகள் கொண்டு இந்த ஓவியப் போட்டி டிஜிட்டல் முறையில் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரிய, அழகிய பரிசுகள் வழங்கப்படும்.
1 முதல் 4-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முதலாம் பிரிவாகவும், 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இரண்டாம் பிரிவாகவும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மூன்றாம் பிரிவாகவும் பிரிக்கப்பட்டு இந்தப் போட்டி நடைபெறும். மூன்று பிரிவில் உள்ள மாணவர்களும், கொடுக்கப்பட்ட மூன்று வெவ்வேறு தலைப்புகளில் தங்களது ஓவியங்களை அனுப்பலாம்.
மூன்று பிரிவினர்களுக்கான மூன்று ஓவிய தலைப்புகளை கீழே காணுங்கள்.
- 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை “எனக்கு பிடித்த கார்ட்டூன்” (My Favorite Cartoon)
- 5 முதல் 8-ஆம் வகுப்பு வரை “கோவிட் பணியாளர்களுக்கு வணக்கம்” (Salute to COVID warriors)
- 9 முதல் 12-ம் வகுப்பு வரை “பண்டிகைகள்” (Festivals)
மாணவர்கள் தங்களது ஓவியங்களை 8668095588 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்ப வேண்டும்.
இந்த Link-ஐ கிளிக் செய்தும் சூரியன் FM-ன் WhatsApp Chat-க்குள் செல்லலாம் : https://api.whatsapp.com/send?phone=918668095588
மாணவர்களின் ஆர்வத்திற்கு இணங்க ஓவியங்கள் அனுப்பவேண்டிய கடைசி நாள் நீட்டிக்கப்படுகிறது. கடைசி நாள்: அக்டோபர் 03
ஓவியத்தை அனுப்பும் முறை :
சூரியன் FM-ன் WhatsApp எண்ணிற்கு “Hi Suryan FM” என Message (குறுஞ்செய்தி) அனுப்ப வேண்டும்.
உங்கள் பெயர் மற்றும் வயதை அனுப்ப வேண்டும்.
உங்கள் ஊருக்கான எண் மற்றும் உங்கள் பிரிவை குறிப்பிட வேண்டும்.
மாணவர்களின் ஓவியத்தை Photo-வாக Upload (பதிவேற்றம்) செய்ய வேண்டும்.
ஓவியங்களை சமர்ப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை கீழுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விதிமுறைகள் :
- மாணவர்களின் ஓவியங்கள் முழுக்க முழுக்க அவர்களின் சொந்த கற்பனையாகவும், படைப்பாகவும் இருக்க வேண்டும்.
- இணையதளங்களில் இருந்தோ சமூக வலைதளங்களில் இருந்தோ புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து அனுப்புவதை தவிர்க்கவும்.
- மாணவர்கள் ஓவியங்களை வரையும் போது அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொள்ளவும். அடுத்தடுத்து வரும் தேர்வு சுற்றுகளில், தேவைப்படும் பட்சத்தில் அந்த வீடியோவையும் மாணவர்கள் அனுப்ப வேண்டியிருக்கும்.
- வேறு ஒருவர் வரைந்த ஓவியங்களையோ அதன் நகலையோ அனுப்புவதை தவிர்க்கவும்.
உங்கள் குழந்தைகளின் ஓவியத் திறமையை இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்ட கிடைத்துள்ள அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் கைவண்ணத்தை சூரியன் FM-க்கு அனுப்பி வையுங்கள் ! பரிசுகளை வெல்லுங்கள்!
*நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.