Specials Stories

ஆண்களின் மலட்டுத் தன்மைக்கு அருமருந்து வெற்றிலை!

வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரணமாகவும் எண்ணுகிறார்கள் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள். தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை, பாக்கு.

தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு. வெறும் வெற்றிலை பாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை, முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை. ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சார சீரழிவும், அந்நிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தை கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது. வெற்றிலையின் மகத்துவத்தை தமிழன் மறக்கும்படி செய்து தம்பதிகளை கருத்தரிப்பு மையங்களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்து விடும், பல்லு கரை போகவே போகாது, தவிர “டேய்… இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டு கிட்டு… என சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி… அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், “ஆங்… தாம்பூலமா அப்படின்னா?”, எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது.

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை, குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் எண்ணிக்கையும் இயக்கமும் குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து. வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenolic Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல.

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Fertility Center-களில் முடங்கி கிடக்கிறது. அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போம்.

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள், அனைவருக்கும் சொல்லுங்கள்.

Article By Smily Vijay

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.