Cinema News Stories

சூரியின் ‘விடுதலை’ First Look இதோ !!!

வெற்றிப்படங்களை மட்டுமே இயக்குவதை வழக்கமாக வைத்திருக்கும் இயக்குனர் வெற்றிமாறன் நகைச்சுவை நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து எடுக்கும் புதிய படத்தின் இரு First Look போஸ்டர்கள் இன்று (ஏப்ரல் 22, 2021) வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “விடுதலை” என பெயரிடப்பட்டுள்ளது.

சூரியை கதாநாயகனாக வைத்து படம் எடுத்தால் அது நிச்சயம் நகைச்சுவையான காமெடி திரைப்படமாக தான் இருக்க முடியும் என்ற கூற்றை மாற்றும் வகையில் இப்படத்தின் first look அமைந்துள்ளது. இப்படத்தில் சூரியுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதி படத்தில் இருந்தாலும், கதையின் நாயகன் சூரி தான் என்பதை first look மூலம் ஆணித்தனமாக வெற்றிமாறன் பதிவு செய்துள்ளார். இந்த போஸ்டரில் “வாத்தியாராக விஜய் சேதுபதி, கதை நாயகனாக சூரி நடிக்கும் விடுதலை” என குறிப்பிட்டுள்ளனர். மேலும் சூரியின் தோற்றத்தை வைத்து பார்க்கும் போது இப்படத்தில் சூரி காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

மேலும் ஒரு போஸ்டரில் மக்கள் செல்வன் கைதியாக அமர்ந்து கைவிலங்குடன் தேநீர் குடிப்பது போன்ற Still இடம்பெற்றுள்ளது. காவல் அதிகாரியாக சூரியும், கைதியாக விஜய் சேதுபதியும் First Look-ல் இருப்பது , ரசிகர்களுக்கு இப்படத்தின் கதை குறித்த ஆர்வம் கலந்த பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Image

யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் “விடுதலை” Update வெளிவந்து சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. வெற்றிமாறனின் வெறித்தனமான கதையம்சத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் தத்ரூபமான நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விடுதலை திரைப்படத்தின் First Look போஸ்டர்கள் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.