Specials Stories Trending

தளபதி விஜய்யின் Green India Challenge !!!

Thalapathy Vijay

தெலுங்கு திரையுலகின் பிரின்ஸ் என கொண்டாடப்படும் மகேஷ் பாபு அவர்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். தன்னுடைய பிறந்தநாளை க்ரீன் இந்தியா சவாலை ஏற்று மரம் நட்டுக் கொண்டாடிய இவர் இந்த சவாலை தளபதி விஜயையும் ஏற்குமாறு கேட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் இந்த சவாலை தளபதி விஜய் ஏற்பாரா, என்ற கேள்வி தளபதியின் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் க்ரீன் இந்தியா சவாலை விஜய் ஏற்று தன் வீட்டில் மரக்கன்றை நட்டு, அந்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். இந்த பதிவை தளபதி பதிவு செய்த சில நொடிகளில் #GreenIndiaChallenge எனும் டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆக தொடங்கிவிட்டது.

தளபதி விஜய் இப்பதிவில் ” மகேஷ் காரு, இது உங்களுக்காக, பசுமையான ஆரோக்கியமான இந்தியாவிற்காக இதை நான் செய்கிறேன் ” என குறிப்பிட்டிருந்தார். இப்பதிவு ரசிகர்களால் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகிறது. இப்பதிவு ட்விட்டரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட Like-களை வாங்கி குவித்துள்ளது. இந்த பதிவிற்கு மகேஷ் பாபு அவர்கள், “இந்த சவாலை ஏற்றதற்கு மிகவும் நன்றி” என கமெண்ட்டும் செய்துள்ளார்.அதுமட்டுமின்றி 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இப்பதிவை ரீட்வீட் செய்துள்ளனர். தளபதி விஜயின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

நகைச்சுவை நடிகர் சதிஷ் தற்போது அவர் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவுசெய்துள்ளார். இப்பதிவில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, விஜய் மரம் நடுவதற்கு தண்ணீர் ஊற்றுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எடிட்டிங்காக இருந்தாலும் இந்த புகைப்படம் ரசிகர்களால் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகிறது. சதீஷின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

தளபதி விஜய் இந்த க்ரீன் இந்தியா சவாலை ஏற்றதன் எதிரொலியாக தளபதியின் ரசிகர்கள் பலரும் இந்த சவாலை ஏற்று மரக்கன்றுகள் நட்டு, இணையத்தில் அதை பகிர்ந்து வருகின்றனர். தளபதி விஜயின் இச்ச்செயல் திரையுலக பிரபலங்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the author

alex lew