ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான Hukum வெளியானதிலிருந்து அப்பாடல் வரிகளை வைத்து விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பெரும் இணைய போரையே நடத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்திற்கு அடுத்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு நீண்ட நாட்களாக ஊடகங்கள், பத்திரிகைகள், இணையதளங்கள் என அனைத்து தளங்களிலும் ஒரு விவாத பொருளாக உலாவிக் கொண்டிருக்கிறது. இந்த சூப்பர் ஸ்டார் Race-ல் பெரும்பாலும் விஜய் மற்றும் அஜித் பெயர்கள் அடிபட்டாலும் சமீப காலமாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் விஜய்யின் முந்தைய படங்களின் வசூல், வியாபாரம், படத்திற்கான Opening இவையனைத்தும் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் அதிகம் என்பதால் தான் என்கிறனர். ரஜினியை விட அதிக வியாபாரம் செய்கிறார் விஜய், ரஜினியின் காலம் முடிந்து விட்டது இனி விஜய் தான் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று ஒரு தரப்பினர் கூறிவந்தாலும், என்றும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார், அவர் இடத்துக்கு யாராலும் வர முடியாது,
அவர் செய்த வியாபாரத்தை யாராலும் இங்கு செய்ய முடியாது, சூப்பர் ஸ்டார் என்றால் என்றுமே ரஜினி மட்டும்தான், வேறு யாரும் அந்த பட்டத்தை உரிமை கொண்டாட முடியாது என்று ரஜினி ரசிகர்கள் ஒரு புறம் கூறி வருகின்றனர். இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் HUKUM வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த பாடல் வரிகளில் “பெயரை தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க 100 பேரு” போன்ற வரிகள் இடம்பெறுள்ளது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டுத்தர ரஜினி தயராக இல்லை, இன்றும் என்றும் நான் தான் நம்பர் 1 வேறு யாரும் எனக்கு போட்டி இல்லை என்று மறைமுகமாக விஜய்க்கு எச்சிரிக்கை விடுத்துள்ளார் என்று சில ஊடகளங்கள் மற்றும் இணையதளத்தில் செய்தி பரவ விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் Social Media-க்களில் மாறி மாறி மீம்ஸ் , Database, History என ஒருத்தரை ஒருத்தர் தாக்கியும், போற்றியும், கலாய்த்தும் பதிவிட்டு Social Media-வையே போர்க்களமாக மாற்றி விட்டனர்.
வழக்கமாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் தான் இதுபோன்று Social Media சண்டைகளை அதிகம் போட்டுக்கொள்வார்கள், ஆனால் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு இன்னும் வெளி வராததாலும், இப்பொழுது விஜய் மற்றும் ரஜினி படங்கள் அடுத்தடுத்து வெளிவருவதாலும், அஜித் VS விஜய்-ஆக இருந்த Social Media சண்டை இப்பொழுது ரஜினி VS விஜய்-ஆக மாறியுள்ளது.