நடிகர் விஷ்ணு விஷால் இந்த Lockdown-ல் தன் தந்தைக்கு சிகை அலங்காரம் செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
FIR, காடன், மோகன் தாஸ் என தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டிருந்த விஷ்ணு விஷாலுக்கு கொரோனா ஒரு குட்டி Break கொடுத்துள்ளது என்றே கூறலாம். திரை நட்சத்திரங்கள் அனைவருக்குமே இந்த Lockdown தங்களின் குடும்பத்தோடு நேரத்தை செலவிட வழி வகுத்து இருக்கிறது.
அந்த வகையில் விஷ்ணு விஷாலும் தன் குடும்பத்தோடு தனது பொன்னான நேரத்தை செலவு செய்து வருகிறார் . கொரோனா அச்சம் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர எதற்கும் வீட்டை விட்டு வெளியே வர கூடாது என அரசு சொன்னதால், தன் தந்தைக்கு தானே வீட்டில் சிகை திருத்தம் செய்துள்ளார் விஷ்ணு விஷால்.
இது குறித்த இன்ஸ்டா பதிவில் அவர் ” இந்த நேரமும் காலமும் தன்னை தன் தந்தையின் சிகை ஒப்பனையாளராக மாற்றி விட்டது” என குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி எந்த ஒரு வேலையையும் நாம் செய்யாமல் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் வரை அது சுலபமான வேலையாக தான் தெரியும் எனவும் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால் தான் வீட்டில் இருப்பதோடு சேர்த்து தன் ரசிகர்களையும் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தி வருகிறார். அந்த வகையில் தன் ட்விட்டர் பக்கத்தின் பெயரை “VISHNU VISHAL – stay home stay safe” என்று மாற்றியுள்ளார்.
விஷ்ணு விஷாலின் பதிவை கீழே காணுங்கள்.