Cinema News Stories

VJS46 மெகா Update இதோ !!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 46-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்ற மெகா update தற்போது வெளியாகியுள்ளது. இந்த Update வெளியான சில நொடிகளில் இருந்தே சினிமா ரசிகர்கள் சன் பிக்சர்ஸ்-ன் update பதிவை புயல் வேகத்தில் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியுள்ளனர்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பொன்ராம் தான் VJS46-ஐ இயக்குகிறார். இதுவரை அவரது படங்கள் குடும்பங்கள் கொண்டாடும் Commercial படங்களாகவே அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் எடுக்கும் படங்களில் காமெடி காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. கதையோடு காமெடியும் சேர்ந்து நகரும் பாணியில் பொன்ராம் எப்போதும் திரைக்கதையை வடிவமைப்பார்.

VJS46-ன் Announcement வீடியோவை பார்க்கும் போது இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்பதையும் நம்மால் கணிக்க முடிகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி போலீஸாக நடித்த சேதுபதி, செக்க சிவந்த வானம் போன்ற திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் மேலும் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.
பொதுவாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமையும். அந்த வகையில் VJS46 திரைப்படமும் மக்கள் கொண்டாடும் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படம் மாபெரும் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொளகிறோம். VJS46-ன் அறிவிப்பு குறித்த சன் பிக்சர்ஸ்-ன் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

About the author

alex lew