கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
சிம்புவும் கௌதம் மேனனும் இணையும் மூன்றாவது படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்திற்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடற்கட்டை ஒல்லியாக கட்டமைத்துள்ளார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே இப்படத்தை குறித்த சந்தேகங்களும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள Second லுக் போஸ்டர் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் ஒரு படி அதிகப்படுத்தியுள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. படப்பிடிப்பு குறித்த அப்டேட்டை சிம்பு நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் சேர்த்து வெளியிட்டார். கௌதம் மேனன் மற்றும் சிம்புவின் திரையுலக பயணத்தில் இப்படம் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெளியாகியுள்ள Second லுக் போஸ்டரில், ஒரு சிறிய அறையில் சிம்புவுடன் 12 பேர் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் இடம் பெற்றுள்ளது. சிம்பு இந்த போஸ்டரில் ஆழமாக எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் Second லுக் போஸ்டரை கீழே காணுங்கள்.