நீங்க தளபதி விஜய் நடிச்ச தெறி படம் பார்த்திருப்பிங்க. அந்த படத்துல INTERVAL SCENE-ல விஜய் மற்றும் அவரோட குழந்தைய தவற அவரோட ஃபேமிலிய வில்லன் கொல பண்ணிட்டு அந்த வீட்ட Gas-அ வச்சு வெடிக்க வச்சிருவாங்க.
அதுல இருந்து விஜய்யும் அந்த குழந்தையும் எப்படி தப்பிச்சாங்கன்னு காமிக்கல. ஆனா தப்பிச்சுட்டாங்கனு நமக்கு தெரியும். சரி அதெப்படி நமக்கு காமிக்காம அத நம்ம தெளிவு படுத்திக்கிட்டோம்? இதெப்படி மக்கள் புரிஞ்சுப்பாங்கன்னு அவங்க முடிவு பண்ணாங்க? இந்த மாதிரி சினிமாவோட நம்ம எப்படி ஒன்றிணையுறோம்? இதற்கான உளவியல் காரணங்கள் தெரியுமா?
நம்ம பொழுதுபோக்குக்கா பாக்குற சினிமா நமக்கு ரொம்ப பிடிச்சும் போகுது, சில சமயம் மொக்க படம் அப்டினு சொல்லிட்டு அடுத்த வேலைய பாக்க போறோம். நம்ம நல்ல படம் மொக்கப்படம் அப்டினு பிரிக்கிறதுக்கு காரணம் என்ன? அப்படி நம்ம ரசிக்கிற சினிமா படங்களோட ஆழ்ந்து அதோட பயணிக்க என்னென்ன உக்திகள் கையாளப்படுதுனு தெரிஞ்சுக்கோங்க.
- பொதுவா நம்ம ஹீரோக்களோட கேரக்டர நம்மளாவே சித்தரிச்சு அந்த படங்கள பாப்போம், அப்டி நம்ம அந்த கதாபாத்திரமவே மாறி வாழ, அந்த கதாபாத்திரம் எப்படி டிசைன் செய்யப்படுது அப்டிங்கறதுக்கு உதாரணமா, நம்ம ரோட்ல எங்கயாவது போயிட்டு இருக்குறப்போ அங்க எதாவது பிரச்சனை இல்லனா விபத்து நடந்தா, அந்த பிரச்னைய நம்ம சரி செய்யனும் அந்த விபத்த நம்ம தடுக்கனும் அப்டினு தோணும், இதுபோல நம்ம நிஜ வாழ்க்கையில பண்ண முடியாத பல விஷயங்கள அந்த ஹீரோ கதாபாத்திரம் திரைப்படத்துல செய்யுது, அத நம்மலே செஞ்ச மாதிரி நினச்சுகிட்டு நம்ம அந்த கதாபாத்திரத்தோட ஒன்றி வாழ ஆரம்பிச்சுடுறோம்.
- சில சமயங்கள்ல மத்த கதாப்பாத்திரங்களும் அதிகம் புடிக்க காரணம்… நம்ம நண்பர்கள், காதலன்/காதலி, அம்மா, அப்பா இப்படி நம்ம வாழ்க்கைல பயணிக்கிற, பயணித்த சில மனிதர்கள, அவர்கள் செய்த விஷயங்கள அந்த சில கதாபாத்திரங்கள் ஞாபகப்படுத்துறது தான்.
- சமீபகாலமா வில்லன் கதாபாத்திரங்களும் அதிகமா விரும்பப்பட காரணம் என்ன தெரியுமா? நம்ம அதிகப்படியா பார்த்த வில்லன் கதாபாத்திரம் விஜய் சேதுபதி. அவர் நடித்த வில்லன் கதாப்பாத்திரங்கள் சிலசமயங்களில் நியாயமான கோரிக்கை உடையதாவும், சிறு நகைச்சுவை கலந்தும் இருக்கும். கில்லி பட வில்லன் முத்துப்பாண்டி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கக் காரணம், அவர் அதில் எவ்வளவு வில்லத்தனங்கள் பண்ணியிருந்தாலும் அது அவர் காதலித்த பெண்ணிற்காக மட்டுமே இருக்குமே தவிர வேறு எதற்காகவும் அல்ல. முத்துப்பாண்டியிடமும் நகைச்சுவை உணர்வும் கலந்தே இருக்கும்.
- யூ ட்யூப் சினிமா விமர்சனம் அல்லது நண்பர்கள் சொல்லி கேட்டிருப்போம், இந்த படத்த நாடகம் மாதிரி எடுத்து வச்சிருக்காங்க, படம் பார்த்த ஒரு ஃபீலே வரல அப்டினு. அதுக்கு காரணமா ஒரு பக்கம் கதை இருந்தாலும், ரொம்ப முக்கியமான ஒரு காரணம் அந்த படத்தோட நிறம். படத்துல வர நிறங்கள் அந்த படத்துல இருக்குற உணர்ச்சிகள நமக்குள்ள தூண்டிவிடுது.
அதிலுள்ள கதாபாத்திரங்கள் என்ன உணருறாங்க அப்டிங்குறத, படத்துல உள்ள நிறங்கள் நம்ம கண்கள் வழியா மூளைக்கு சிக்னல் அனுப்பி நமக்கு அதே உணர்ச்சிய புரிய வைக்குது. அது எப்படி வேல செய்யுதுனா புளிப்பு, இனிப்பு, அழுகை, பயம், சிரிப்பு இதெல்லாம் நாம எப்டி புரிஞ்சுக்குறமோ அது மாதிரி தான். கலர சரியா கையாண்டு ஒரு படத்துல வச்சாங்கன்னா அதுல கதை சரியா இல்லைனாலும், நமக்கு விஷுவலா படம் பிடிச்சு போயிடும்.
அதே மாதிரி நம்ம ரசிக்கிற சினிமாக்கள்ல, அதை தயாரிக்கிறவங்க சில விஷயங்கள் மூலமா நம்மள அதோட ஒன்றிணைந்து வாழ வைப்பாங்க. அத நம்ம பெருசா கவனிச்சிருக்க மாட்டோம், அதுல சில விஷயங்கள சொல்றேன்… சரியா இல்லையானு செக் பண்ணிட்டு சொல்லுங்க.
சினிமால வாழ்க்கை நகர்வுகள் அடுத்த கட்டத்த தொடும்போது, அந்த சீன்க்கு முன்கூட்டியே ‘ஏதோ தப்பா நடக்கபோகுது’ இல்ல ‘ரொம்ப சந்தோசமான விஷயங்கள் நடக்கப்போகுது’ அப்டி நீங்க உணர்ந்திருக்கிங்களா? அது எப்படி வேல செய்யுதுன்னா ‘JOKER’ படம் நீங்க பார்த்திருப்பிங்க… அதுல அந்த JOKER கதாபாத்திரம் படத்தோட ஆரம்பத்துலருந்து திரையின் இடதுபுறத்தில இருந்து வலதுபுறம் போறமாதிரி இருக்கும். தான் எப்படியாவது நல்ல நிலைமைக்கு போகனும்னு அந்த கதாபாத்திரம் நகரும். ஆனா இடையில் பல இடங்கள்ல அவன் முன்னேறி போக போக அந்த JOKER-அ பின்னாடியே அடிச்சு தள்ளிட்டு இருப்பாங்க. அது வலதுல இருந்து இடது பக்கம் போர மாதிரி அமைஞ்சுருக்கும்.
பிறகு JOKER கொஞ்சம் கொஞ்சமா கெட்டவழில போறத வலதுல இருந்து இடது புறமா போற மாதிரி காட்டியிருப்பாங்க. இந்த மாதிரி பல படங்கள்ல இந்த விஷயத்த கையாண்டுருப்பாங்க. இந்த உலகசினிமாக்கள் மொத்தமும் ஒரு 7 வகைல மட்டுமே அமைஞ்சிருக்கும். இப்போ நா சொல்ற விஷயங்கள வச்சி நீங்க அத உணருவிங்க.
ஒரு ஹாரர் படம் அப்டின்னா, ஒரு பாழடஞ்ச வீடு அத புதுப்பிச்சு அந்த வீட்டுக்கு குடி வரும் ஃபேமிலி அங்க பேய் இருக்குறத உணர்றாங்க, அதுக்கப்புறம் என்னாச்சு? அங்க இருந்து வெளியேருனாங்களா? இல்லையா? அந்த பேய எப்படி சமாளிச்சாங்க அப்டிங்குறதுதான் கதை.
ஒரு சைக்கோ படம் அப்டின்னா, ஒரு சைக்கோ பல பேர கொடூரமா கொல பண்ணுவான், கொல பண்ணது யாரு அப்படினு கண்டிபுடிக்குற ஹீரோ, கடைசில அந்த சைக்கோ சின்ன வயசுல பட்ட அவமானங்கள், கஷ்டங்களாலதான் இப்படி பண்ணானு சொல்லுவாங்க.
ஒரு காதல் படமா இருந்தா, ஹீரோ வாழ்க்கை ஜாலியா போய்ட்டு இருக்கும், திடீர்னு எதோ ஒரு இடத்துல ஒரு அழகான பொண்ண பாத்து அந்த பொண்ண காதலிக்கும் வேலைல இறங்கி, அதில் வரும் பல தடைகளை கடந்து இருவரும் காதலித்து கல்யாணம் செய்தார்களா? இல்லையா என்பதுதான் கதை.
ஒரு REVENGE படம் என்றால், ஹீரோ தன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும்போது வில்லன் அவனுடைய வாழ்க்கையை கெடுக்கும்படி ஏதாவது செய்துவிட, அதை அந்த ஹீரோ தாங்காமல் அந்த வில்லனை என்ன செய்தான், அவன் இலக்கை எப்படி அடைந்தான் என்பது கதை. இது ஆக்சன் படங்களுக்கும் பொருந்தும்.
ஒரு ஃபான்டஸி சூப்பர் ஹீரோ படம் என்றால், ஒரு அப்பாவி ஹீரோவிற்கு எதிர்பாரதவிமாக ஒரு அபூர்வ சக்தி கிடைத்துவிடும், அதே சமயம் அந்த ஊரையோ அல்லது வேறு விஷயத்தையோ அழிக்க வில்லன் கிளம்பிவர அந்த சூப்பர் ஹீரோ எப்படி அந்த வில்லனை சமாளித்தான் என்பது கதை.
SCI-FI படமாக இருந்தால், ஒரு ஆராச்சியாளர் ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும்போதோ அல்லது கண்டுபிடித்த கருவியின் மூலமாகவோ நடந்த விளைவை சரி செய்வதே அதன் கதையாக அமையும்.
ஒரு ADVENTURE படமாக இருந்தால், ஹீரோவும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு புதையலையோ அல்லது வேறு விஷயங்களையோ தேடி, கடைசியில் அவர்கள் வாழ்க்கைக்கு எதாவது ஒரு பாடம் கத்துக்குற மாதிரி கதை அமையும்.
இந்த 7 பிரிவின் வழியாக மட்டுமே இந்த உலக சினிமாவே அடங்கியுள்ளது. இதில் தன் திறமையால் மக்கள் விரும்பும்படியான படங்களை கொடுப்பவர்கள் மட்டுமே சிறந்து விளங்குகின்றனர். இதுமாதிரி பல உளவியல் ரீதியான விஷயங்கள் நம்மள இந்த சினிமாக்களோட ஒன்றிணைத்து அதோட பயணிக்க உதவுது.
இந்த சினிமா நமக்கு வெறும் பொழுதுபோக்காக மட்டுமே அமையல, நம் வாழ்க்கையை வாழ சிறு துண்டு பிரசுரம் தந்துட்டு போகும். அந்த பிரசுரம் தேவைன்னா அத வச்சிக்குவோம், இல்லைன்னா அங்கேயே விட்டுட்டு போய்டுவோம்.