பொதுவாக ஒரு திரைப்படத்தின் தலைப்பை படத்தின் முக்கிய கருப்பொருளில் இருந்தோ அல்லது முக்கிய கதாபாத்திரத்தின் அடிப்படையிலோ பெயரிடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் சமீப நாட்களாக ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற பிரபலமான படங்களின் தலைப்பை தங்களுடைய படங்களுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இது திரைப்படம் மக்களிடையே சென்றடைய எளிய வழியாக இருப்பது மட்டுமில்லாமல் ரசிகர்களிடையையும் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்கும் என்ற நோக்கத்தில் பழைய படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துகின்றனர்.
மாப்பிள்ளை, வேலைக்காரன் , பொல்லாதவன், பாயும்புலி, மாவீரன், நான் சிகப்பு மனிதன், தங்கமகன், படிக்காதவன், தில்லு முள்ளு என பெரும்பாலும் ரஜினிகாந்த் படங்களின் பெயர்களையே அதிக அளவில் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். அதையும் தாண்டி வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன், லவ் டுடே, காக்கி சட்டை என மற்ற நடிகர்களின் நமக்கு மிகவும் பரிட்சியமான மிகப்பெரிய வெற்றிப் படங்களின் தலைப்பையும் மீண்டும் பயன்படுத்தியுள்ளனர்.
இதையும் தாண்டி நமக்கு தெரியாத சில படங்களின் தலைப்பும் முன்பே வெளியாகிய படத்தின் தலைப்பாக இருக்கும். அப்படி வெளியான சில படங்களை இங்கு பார்ப்போம்.
1) எதிர்நீச்சல் – 1968 நாகேஷ் | 2013 சிவகார்த்திகேயன்.
2) அசுரன் – 1995 R. K. செல்வமணி இயக்கத்தில் நெப்போலின்யன் நடித்தது |
2019 வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்தது.
3) விஸ்வரூபம் – 1980 (சிவாஜி) | 2013 (கமல்ஹாசன்)
4) 1964 சிவாஜியின் கர்ணன் | 2021 தனுஷின் கர்ணன்
5) 1972 ராஜா – சிவாஜி | 2002 ராஜா – அஜித்
6) சதிலீலாவதி -1936 (MGR) | 1995 (கமல்)
7) தசாவதாரம் -1976 (ஜெமினி கணேசன்) | 2008 (கமல்ஹாசன்)
8) இரும்புத்திரை – 1960 (சிவாஜி) | 2018 (விஷால்)
9) பழனி – 1965 (சிவாஜி) | 2008 (பரத்)
10) நெஞ்சிருக்கும் வரை -1967 (சிவாஜி) | 2006 (நரேன்)
11) பார்த்திபன் கனவு – 1960 (ஜெமினி) | 2003 (ஸ்ரீகாந்த்)
12) மகளிர் மட்டும் -1994 (ரேவதி) | 2017 (ஜோதிகா)
13) ஜீவா -1988 (சத்தியராஜ்) | 2014 (விஷ்ணு விஷால்)
14) துருவ நட்சத்திரம் – 1993 (அர்ஜுன்) | 2023 (விக்ரம்)
15) புரியாத புதிர் – 1990 (K .S .ரவிக்குமார்) | 2017(விஜய்சேதுபதி)
மேலும் இதுபோன்று நூறுக்கும் மேற்பட்ட பழைய தமிழ் படங்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்சினிமாவில் தலைப்பிற்கு பஞ்சம் இருக்கிறது, இப்பொழுதுள்ள இயக்குனர்களுக்கு தங்களது கதைக்கு தகுந்த தலைப்பை உருவாக்க தெரியவில்லை. அதனாலேயே பழைய படங்களின் பெயர்களை பயன்படுத்துகிறார்கள் என்ற விமர்சனம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.