நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்து முடிந்த சூரியன் FM நேர்காணலில் நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேச ஆரம்பித்தவரிடம் அவரின் பாடல்கள் சம்மந்தமான மீம்ஸ்களை அவரிடம் காண்பித்தோம். அவரின் முகத்தில் ஆர்வமும், சிரிப்பும் குறையவேயில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் மீம்ஸ்களை ரசித்து பார்த்தார்.
அப்போது பாடலின் வரிகளுக்கு நீங்கள் எந்த அளவு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்று கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “மிகவும் முக்கியத்துவம் கொடுப்பேன். நாம என்ன சொல்றோம்னு கேக்குறவங்களுக்கு புரியனும். அதனால் தான் என்னுடைய பாடலின் வரிகள் வார்த்தைகள் எல்லாமே சாதாரணமாகவும், எளிமையாகவும் இருக்கும். தமிழ் புலவர்களுக்கு மட்டும் புரிய வேண்டுமென்று நினைக்காமல் எளிமையான மக்களுக்கும் புரிய வேண்டும் என்று நினைப்பேன்.
நானும் நீங்களும் பேசிக் கொள்வதை தான் கவிதை என்று நினைப்பேன். அதுவே அனைவருக்கும் போய் சேரும். இல்லையென்றால் புரியவே கூடாது. அதனால் தான் சில நேரங்களில் புரியாத வார்த்தைகளை கண்டுபிடித்து அதை வைத்து பாடல் வரிகளை அமைப்பேன்” என்று கூறினார்.
மேலும் ‘நாக்கா மூக்கா’ பாடலுக்காக ‘கேன்னஸ் லயன்’ விருது பெற்றுள்ளீர்கள். இந்த விருதை பெற்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் நீங்கள் தான். இதை எங்கேயும் சொல்லவில்லையே, ஏன்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் “முதலில் எனக்கே இது தெரியாது. ரொம்ப நன்றி சொல்லி சந்தோசமா விருத ஏத்துக்கிட்டேன்.
ஏன்னா நமக்கு தான் அவ்வளவா மியூசிக் தெரியாது இல்லையா, என்ன தான் நாலு பேரு நம்மள பாராட்டினாலும் நாம யாருனு நமக்கு தெரியும்.” என்று தன்னடக்கமாக கூறினார். அதுமட்டுமின்றி அவர் இசையமைத்த பல பாடல்கள் குறித்த நிறைய புதுமையான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்: