Specials Stories

பெண் சமத்துவம் – கடல்லயே இல்லையாம் !

பாலின சமத்துவம் பத்தி பேச வாய தொறந்தாலே இவுங்க கண்டிப்பா ‘feminist’ஆ தான் இருப்பாங்கனு நினைக்குறதே பலருக்கு வேலைய போச்சு! உண்மையா சொல்லணும்னா எனக்கு அதுக்கு அர்த்தமே ஒழுங்கா தெரியாது. ஆனா… பெண்களுக்கான சமத்துவத்த பத்தி பேச போதுமான அறிவும் புரிதலும் இருக்கு.

அதுனால என்னோட perspectives ஆ சொல்லுறேன் படிங்க. Equality அதாவது சமத்துவம் அப்டினாலே எல்லாருக்கும் ஒரே மாதிரியானா விஷயங்கள் நடக்கணும் , கிடைக்கணும். அதான நியாயம்! அதான இயல்பு. ஆனா இங்க அப்டியா சார் நடக்குது? நாடு, மொழி, இனம், கலாச்சாரம், ஜாதி, மதம் பாகுபாடுகளுக்கு நடுவுல எப்போமே எல்லாத்துலயும் attendance போடுறது பாலின பாகுபாடுகள் (Gender inequality) தான்.

இது என்னங்க அவ்வளவு முக்கியமான விஷயமா, அதுவும் இப்போ இருக்குற காலகட்டத்துல எல்லாமே மாறிருச்சு. பெண்களும் வேலைக்கு போறாங்க, சம்பாதிக்குறாங்க, பெண்களுக்கு எல்லாமே கிடைக்குது. இதுக்கு மேல என்ன equality வேணும்? அப்டினு பல பேரு சொல்லி நான் கேட்டுருக்கேன், சோசியல் மீடியா கமெண்ட்ஸ்ல படிச்சுருக்கேன்.

இதே மாதிரி இந்த ரெண்டு, மூணு விஷயத்துக்கு மட்டும் ஆண்களுக்கும் chance, equality, freedom-லா குடுத்தா போதுமா? பத்தாதுல! அதான் எங்களுக்கும் பிரச்சனை. இப்போ சாதாரணமா நம்ம வீட்டுல இருந்தே ஆரம்பிப்போம். ஆண் பிள்ளைகளுக்கு குடுக்குற சுதந்திரம் பெண் பிள்ளைகளுக்கு நிறைய இடங்கள்ல மறுக்கபடுது. அம்மா நா வெளிய போறேன்னு சொல்லிட்டு ஒரு பையன் வெளிய கெளம்புனா, சரி டா! சீக்கரம் வந்துரு! அவ்வளவு தான். சில நேரங்கள்ல அத கூட கேக்குறது இல்ல.

பொண்ணுகளுக்கு first கேள்வியே எங்க போற? யாரு கூட போற? எதுக்கு போற? எப்போ வருவ? இது எதுவுமே ஒத்துக்கலியா, அப்போ ஒரே பதில் “போகாத!” வீட்ல ஏதாச்சு முக்கியமான முடிவு எடுக்கணும்னா, வீட்ல இருக்க அப்பா, அண்ணா, தம்பி, கணவர், குடும்பத்துல இருக்க பெரியவங்க (அதுவும் பெரியப்பா, சித்தப்பா… அப்பப்பா!!) இதுல

ladies-லா மூக்க நுழைக்கமாட்டாங்க, விடவும் மாட்டாங்க.

சரி முக்கியமான விஷியங்கள்ல தான் இப்டினா, பொண்ணுகளுக்கு புடிச்ச சின்ன சின்ன விஷியங்கள கூட அவுங்களுக்கு செய்ய விரும்புற காரியங்கள பண்ணவே விடுறது இல்ல. இது எல்லா குடும்பங்கள்லயும் இருக்கு. வேற வேற designs-ல. சமுதாயத்துல மாற்றம் வரணும்னு சொல்லுறவங்க, மாற்றத்த அவுங்ககிட்ட இருந்து ஆரம்பிக்கணும்னு நிறைய நேரங்கள்ல தெரியுறது இல்ல.

Equality ஆ பத்தி பேசுனா சில அறிவாளிக வாதாடுறா வழக்கமான உருட்டு என்னன்னா, ஆண்கள் மாறியே பெண்களும் smoke பண்ணனும்னு சொல்லுறாங்க. Drinks அடிக்குறாங்க. Pub போறாங்க. இந்த மாதிரியான chauvinistic புரிதலே முதல்ல தப்பு. இது தனி நபர் விருப்பம். ஆண்கள் பண்ணுனா யாரும் கண்டுக்குறது இல்ல. பெண்கள் பண்ணுணாதா அது தவறா சித்தரிக்க படுது.

இந்த smoking, drinking-லா யாரு பண்ணுனாலும் உடல் நடத்துக்கு கேடு தான். அதுனால அடுத்தவாட்டி வேற விஷயங்களுக்கு விவாதம் பண்ணுங்க. புடிச்ச படிப்ப படிக்க, புடிச்ச dress போட, புடிச்ச வேலைக்கு போக, புடிச்ச நபரை திருமணம் அல்லது judgement இல்லாம மறுமணம் பண்ண, மனசுக்கு தோணுற விசயங்கள பேச, செய்ய புடிக்காத காரியங்களுக்கு no சொல்ல, பாதுகாப்பா வெளிய போய்ட்டு வர, தனக்காக பேச, independent ஆஹ் நிக்க இப்டி இன்னும் நெறைய விஷியங்கள் இருக்கு.

இது எல்லாமே equality னு சொல்ல கூடிய ஒரு பெரிய போராட்டம் தான். இப்போ சில விசயங்கள பத்தி பாக்கலாம்:

1. Independent லைப்:

ஆணுக்கு – ச்ச! எவ்ளோ successful-அ, சந்தோஷமா இருக்காரு.

பெண்ணுக்கு – சொல் பேச்சு கேக்காம, அடங்காம ஆடுற!

2. Decision making:

ஆணுக்கு – நல்ல தெளிவா முடிவு எடுக்குறாரு. இவரு முடிவு எடுத்த கண்டிப்பா சரியாதான் இருக்கும்.

பெண்ணுக்கு – உனக்கு ஒன்னும் தெரியாது. பேசாம இரு.

3. கல்யாணம்:

ஆணுக்கு – எப்டியாச்சு கஷ்டப்பட்டு வேல பாத்து settle ஆயிட்டாரு.

பெண்ணுக்கு – வயசாயிட்டே போகுது. எப்படி பையன் கிடைப்பான்.

இதுலா சும்மா ஒரு சாம்பிள் தான். உங்கள சுத்தியே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கு. நல்ல பாருங்க.

இப்போலா அப்டி இல்லைங்க! காலம் மாறிருச்சு. பெண்களுக்கு சாதகமா இருக்குனு நீங்க நம்புனா, நெனச்சா, ரொம்ப sorry, உங்களுக்கு இன்னும் விவரம் பத்தல.

Article By RJ Adithiya