தமிழ் சினிமால காலங்காலமா இருக்க ஒரு காட்சினா விபத்துல அடிப்பட்டவர 5 நிமிடத்துக்கு முன்னாடி மருத்துவமனையில சேர்த்து இருந்த காப்பாத்தி இருக்கலாம் என்பதுதான்.
அது மாதுரி நம்ம நாட்டுல விபத்துக்களால் உயிர் இழப்பவர்களில் 80 சதவிகிதம் பேர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதல் ஒரு மணி நேரத்தில் பலியாகிறார்கள். இத்தகைய விபத்தில் சிக்கியவர்களுக்கு முறையான முதல் உதவி கிடைத்திருந்தால், அவர்கள் நிச்சயம் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு முதல் உதவி என்பது தேவையானதாகவும், அவசியமாகவும் இருக்கின்றது.
ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும்முன், அவர்களுக்கு தேவையான அவசர சிகிச்சையே ‘முதல் உதவி’ ஆகும். ‘முதுலுதவி’ என்பது ஆபத்தான நிலையில் (உடல்நிலை சரியில்லாமல் அல்லது காயம்பட்டு) இருப்பவருக்கு விரைவாக மற்றும் சரியான முறையில் மருத்துவ உதவி அளிப்பது.
ஆபத்தான நிலையில் இருக்கும் ஒருவருக்கு, அவருடைய உயிரை காப்பாற்ற அப்பொழுது அவருக்கு என்ன கொடுக்க வேண்டும், என்ன கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து சமயோசிதமாக செயல்பட வேண்டும். முதலில் சென்று முதலுதவி செய்வதை விட அடிபட்டவர்களை சுற்றி கூட்டம் கூடி விபத்தை பற்றி வீண் விவாதம் கொள்ளாமல் விலகி அவர்களுக்கு காற்று விட வேண்டும் பெரும் உதவி ஆகும்.
முதலுதவி செய்பவர் மருத்துவர்கள் வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வரை அவருடன் இருந்து, முழு விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், முதலுதவி என்பது அந்த நேரத்தில் செய்யக்கூடிய தற்காலிகமான சிகிச்சை என்பதை நாம் உணர வேண்டும். அதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் முதலுதவி செய்ய இந்நாளில் சபதமேற்க வேண்டும்.
சமூகவலைத்தளங்களில் முதலில் பகிர்ந்து லைக் வாங்கி பிறருக்கு இடித்தவராக மாறுவதற்கு பதில் முதலுதவி செய்து முதலில் உங்களுக்கு பிடித்தவராக மாறுங்கள்.