2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி பால் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சாதாரண பாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?? நமது உணவில் பாலின் முக்கியத்துவத்தைக் கொண்டாட, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஜூன் 1 ஆம் தேதியை உலக பால் தினமாக நியமித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி உலக பால் தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஏனெனில் இது உலகின் பல நாடுகளில் தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தேதி பல நாடுகளில் பள்ளி ஆண்டு முடிவடைகிறது, இது குழந்தைகளின் உணவில் பாலின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த நேரமாகும்.
இது பால் நிறுவனங்கள், விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளால் ஒவ்வொரு ஆண்டும் உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது.பால் என்ற இரட்டை எழுத்தில் பாலின் சத்துகளை மதிப்பிட முடியாது..! பிறந்த குழந்தை முதல் வயது முதிர்வு காலங்களிலும் அத்தியாவசிய பொருளாக இருப்பது பால் மட்டுமே..!
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கிடைக்காத பொழுது தாய்ப்பாலே அதற்க்கு மாற்றாக கொடுக்க படுகிறது..!பசும்பால் மட்டுமல்லாமல் மற்ற விலங்குகளான ஆட்டுப்பால், எருமைபால்,கழுதைபால், குதிரைபால் ஏன் ஒட்டகப்பால் வரை விலங்குகளின் பாலை பயன்படுத்திகிறோம்..!பால் மட்டுமல்லாமல் அதிலிருந்து உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மோர், தயிர். வெண்ணெய், நெய் போன்ற பால் பொருள்களும் அதிக அளவு சத்து மிகுந்த பொருள்களாக பயன்படுத்துகிறோம்.
பாலில் புரதம், லாக்டோஸ், தாது உப்புக்கள், வைட்டமின்கள் என பல சத்துகள் பலவும் உள்ளது..!தாய்ப்பாலுக்கு இணையான ஃபோலிக் அமிலங்களும் தயமின், பொட்டாசியம் இதில் இருப்பதால் தான் குழந்தைக்கு தாய்ப்பாலுக்கு மாற்றாக பசும்பால் அடுத்த இடத்தில் இருக்கிறது.
பாலில் குறைந்த அளவு புரதம் இருந்தாலும் இது கால்சியம் மற்றும் லாக்டோஸ் அதிகம் கொண்டிருக்கிறது. பால் உடலுக்குள் லாக்டிக் அமிலமாக மாறு உடல் புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை உறிஞ்சு கொள்ள ஊக்குவிக்கிறது.குழந்தை முதல் தினசரி ஒரு டம்ளர் பால் குடிப்பவர்கள் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் என்னும் பிரச்சனையை அதிகம் சந்திக்கமாட்டார்கள்.
குறிப்பாக பெண்கள் மெனோபாஸ் காலங்களில் சந்திக்கும் ஆஸ்டியோபெராசிஸ் என்னும் எலும்பு மென்மை, தேய்மானம் பிரச்சனை வராமல் தடுக்கும் என மருத்துவர்களும் ஆலோசனை தருகின்றனர்.இந்த உலக பால் தினம் பால் துறையுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு கவனம் செலுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பால் போன்ற ஆரோக்கியமான உணவுமுறைகளை ஊக்கப்படுத்தவும்,இந்த வருடத்தின் கருப்பொருள், உலகை வளர்க்கும் வகையில் தரமான ஊட்டச்சத்தை வழங்குவதில் பால்வளம் வகிக்கும் முக்கிய பங்கைக் கொண்டாடுவதில் கவனம் செலுத்தும். பால் என்பது அணுகக்கூடிய, மலிவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும், மேலும் உலகம் முழுவதும் உள்ள சமச்சீர் உணவுகளின் இன்றியமையாத பகுதியாகும்.
விழிப்புணர்வையும் ஏற்படுத்தவும், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பால் பல்வேறு வகையில் அன்றாடம் பயன்பட்டாலும் பல இடங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. பாலின் முக்கியத்துவத்தை உலகிற்கு நாமும் பறைசாற்றுவோம்..!!