தூது போறது, லெட்டர் போடுறது, Fax, டெலிபோன் வரிசைல அடுத்ததா செய்திய ஒரு இடத்திலருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது ரேடியோ. TVக்கு முன்னாடியே தோன்றி இன்னைக்கு சமூகவலைதளங்கள் நம்ம ஆக்கிரமத்துள்ள காலம் வரையிலும் ரேடியோ தனக்கான இடத்த விட்டுக் கொடுக்காம தொடர்ந்து பயணித்து வருவதே அதோட மாபெரும் வெற்றி.
உலகெங்கும் வானொலி தினம் பிப்ரவரி 13 ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருது. இந்த நாளில் இந்தியாவில் வானொலி அறிமுகமானது முதல் அதன் பின் நிகழ்ந்த சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் பத்தி பார்ப்போம்.
- இந்தியாவில் வானொலி ஒலிபரப்பு Radio Club of Bombay & later Calcutta Radio Club ஆகிய 2 தனியார் நிலையங்கள் வழியா 1923 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1924 இல், Madras Presidency Radio Club மூலமா ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது.
- 1930-ல, மும்பை & கொல்கத்தால உள்ள நிலையங்களை நடத்தி வந்த Indian Broadcast Company (IBC) திவாலாகி கலைக்கப்பட்டது. அதுக்கு பின்னாடி, தொழிற்துறை மற்றும் தொழிலாளர் துறையின் கீழ் இந்திய மாநில ஒலிபரப்பு சேவை (Indian State Broadcasting Service) சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது.
- இந்தியாவின் முதல் ஒலிபரப்பு கட்டுப்பாட்டாளர் லியோனல் ஃபீல்டன். அவர் ஆல் இந்தியா ரேடியோ(AIR)ல ஐந்து ஆண்டுகள் ஒளிபரப்பு கட்டுப்பாட்டாளராக இருந்தார். இவரே All India Radio எனும் பெயரை சூட்டினார்.
- இந்தியாவில் வானொலி வாயிலான முதல் செய்தித் தொகுப்பு ஜனவரி 19,1936 அன்று ஒலிபரப்பப்பட்டது.
- ஜூன் 8, 1936-ல, இந்திய மாநில ஒலிபரப்பு சேவை(Indian State Broadcasting Service), அகில இந்திய வானொலி(All India Radio)யாக மாறியது. சென்னையில் 1938-ல் இதன் அலுவலகம் தோன்றியது.
- All India Radio-விலிருந்து முதல் தேசிய இசை ஒலிபரப்பு நிகழ்ச்சி ஜூலை 20, 1952 அன்று நடைபெற்றது. 1954-ல் மாநில செய்திப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிகளுக்கான செய்திகள் ஒலிபரப்பப்பட்டது.
- இந்தியாவின் விவித் பாரதி ரேடியோ சேவைகள் அக்டோபர் 3, 1957 இல் தொடங்கப்பட்டது.
- சே குவேரா 1959 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த போது அகில இந்திய வானொலிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
- இந்தியாவின் முதல் FM சேவை 1977 ஜூலை 23 அன்று சென்னையிலிருந்து தொடங்கப்பட்டது. ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான மற்றும் துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணம். இதுல கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் மட்டும் விதிவிலக்கு. இதோட டிரான்ஸ் மீட்டர் அதாவது ஒலிபரப்பு கோபுரம் மலை உச்சியில் இருப்பதால, இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை போகும். இதனால, தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடையுது.
- 1993 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் மும்பையில் நடைபெற்ற தனியார் பார்ட்டிகளுக்கென FM-ல் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்ப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை வானொலியின் வளர்ச்சி பல்வேறு மொழிகளில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டே இருக்கிறது.
இப்படியாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தனது எல்லைகளை விரிவாக்கி மாபெரும் வளர்ச்சியடைந்துள்ள வானொலி இன்றுவரை காலத்திற்கேற்ப தனது பரிணாமத்தை மாற்றிக் கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் ரேடியோ உடனான நமது பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.