Specials Stories

சுவாரஸ்யத்தின் மறுபக்கம் சுஜாதா!

Sujatha

20 நூற்றாண்டுகள் கடந்தாலும் இன்னும் பல பெண்கள் திருமணத்துக்கு பிறகு தங்களுடைய பெயருக்கு பின்னாடி கணவர் பெயரை சேர்த்துக்கறது உண்டு… ஆனா எழுத்தாளர் ரங்கராஜனோ தன்னோட புனைப்பெயரையே தன்னோட மனைவி சுஜாதாவோட பெயரா மாத்திகிட்டு தான் பல கதைகள எழுதுனாரு…

திருவல்லிக்கேணில பிறந்து திருச்சில படிப்பை முடிச்சு திரும்ப சென்னை பக்கம் திரும்புன இவரு வாழ்க்கை அப்துல்கலாமுக்கு பக்கத்துலயே இவர classmate-ஆவும் உக்கார வெச்சுது… சுஜாதா MIT-ல தன்னோட மின்னணுவியல் படிப்ப முடிச்சு அந்த துறையில பணியாற்றுனதுக்கு சிறந்த சான்றா நம்ம இன்னிக்கி வாக்களிக்குற Electronic voting machine-அ கண்டுபுடிக்கறதுல ஒரு முக்கிய பங்கு வகிச்சாரு..

Electronics-க்கு அடுத்து எழுத்துத் துறைல கால் பதிச்ச இவரு எக்கச்சக்கமான கவிதைகள், நாடகங்கள், சிறுகதைகள், நாவல்கள்னு தன்னோட படைப்பு மழைய பொழிஞ்சாரு…

Writer Sujatha & Thalapathy | PC: Vikatan | Thalapathy Vijay | Flickr

ஒரு பெண்ண மையமா வச்சு எழுதப்பட்ட திக் திக் த்ரில்லர் கதையான ‘காயத்ரி ’ , 80’களின் ஆரம்பத்துலயே High tech science concepts-அ பயன்படுத்தி எழுதப்பட்ட துப்பறியும் கதையான ‘கொலையுதிர் காலம்’ , எந்திரன் படத்திற்கான முன்னோடி நாவல்களான ‘என் இனிய இயந்திரா’ , ‘மீண்டும் ஜெனோ’ , இவ்ளோ ஏன் எந்திரன் படத்தோட வசனகர்த்தாவும் இவரு தான்…

முன்னாடி குறிப்பிட்டு இருந்த கதைகள் கூடவே ‘பிரிவோம் சந்திப்போம்’ , ‘ஏன் எதற்கு எப்படி’ , ‘கொலை அரங்கம்’ இதெல்லாம் இவரோட ‘Must and best read’ novels.

இலக்கியங்களுக்கு அடுத்து இந்திய சினிமால பெரிதளவுல பேசப்பட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட ‘விக்ரம்’ படத்தோட கதாசிரியரும் டெக் கதைகள்-ல சுழன்றடிச்சு எழுதுற சுஜாதா தான்…

கதைல மட்டும் இல்ல இவரோட அட்டகாசமான வசனங்கள் இயக்குனர் மணிரத்னத்தோட ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, இயக்குனர் ஷங்கரோட இந்தியன், பாய்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன் படங்கள்ல எதிரொலிச்சுது..

வார இதழ்கள்ல ஆரமிச்சு, சினிமா வசனங்கள், வருடம் கடந்து பேசப்பட்ற நாவல்கள் வரை ஒவ்வொரு படைப்புலயும் சுவாரஸ்யத்தின் மறுபக்கமா விளங்குற சுஜாதா அவர்களுக்கு சூரியன் FM சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Article By RJ Thaara

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.