நடிகை யாஷிகா ஆனந்த் தனது 21ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, நோட்டா போன்ற படங்களில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார்.
Love u doll ❤️ miss u so much 🤗 tysm love 💯 https://t.co/cn6jWeXIQZ
— Yashika Aannand (@iamyashikaanand) August 3, 2020
யாஷிகா ஆனந்த் இதுவரை ஆறு படங்களில் நடித்துள்ளார். மணியார் குடும்பம் மற்றும் கழுகு 2 திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் யாஷிகா ஆனந்த் நடனமாடியுள்ளார். திரையுலகிற்கு வந்து நான்கு வருடங்களே ஆன நிலையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அமைத்துள்ளார். எப்போதெல்லாம் இவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்கிறாரோ அப்போதெல்லாம் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆவது வழக்கம்.
2014 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு திரைப்படம் தான் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்து வெளிவந்த முதல் திரைப்படம். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த காவியா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 2019ஆம் ஆண்டு வெளிவந்த “ஜாம்பி” திரைப்படம் தான் இவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம்.
மேலும் பல வெற்றி படங்களில் யாஷிகா ஆனந்த் நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோள். இவரது பிறந்தநாளை முன்னிட்டு இவரது ரசிகர்கள் இணையத்தில் #HBDYYashikaannand எனும் டாகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரபலங்கள் பலரும் யாஷிகா ஆனந்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவரது திரையுலக பயணம் ஒரு வெற்றி பயணமாக அமைய வேண்டும் என வேண்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சூரியன் FM சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.