இந்த உலகம் யோகிபாபுவ பாத்துருக்கு. ஆனா அந்த யோகிபாபுக்கு முன்னாடி பாபுனு ஒருத்தர் இருக்காரு. அவரு தான் தன்னோட வழக்கை பாபுவா இருக்கணுமா இல்ல யோகிபாபுவா இருக்கணுமான்னு நிர்ணயிச்சாரு.
நமக்கு திறமை இருக்கும், ஆனா அந்த திறமைய வெளிக்காட்ட சரியான வாய்ப்பும் நேரமும் நமக்கு இல்லாம போறதுனாலதான் நம்மகிட்ட இருக்குற திறமைய வெளிக்காட்ட முடியல. ஆனா இயக்குனர் ராம் பாலா, பாபுவோட திறமைய பாத்து அவருக்கு ஒரு TV Channel-ல Side Artist Role கொடுத்தாரு.
அங்க இருந்து பாபு சினிமால சாதிக்கணும்னு அயராது உழைக்க ஆரம்பிச்சாரு. அவரோட கடின உழைப்புக்கான ஊதியம் அவருக்கு தக்க சமயத்துல கிடைக்குது. 2009-ல சுப்ரமணியம் சிவா இயக்கத்துல வெளிவந்த திரைப்படம் தான் ‘யோகி’. அமீர் இயக்கி நடித்து வெளிவந்த இந்த படத்துல பாபு அவர்கள் ஒரு ஆர்வம் மிக்க நடிகரா நடிச்சிருப்பாரு.
தன்னோட முதல் திரைப்படம் எப்பயுமே எல்லாருக்கும் ஸ்பெஷல் தான. அந்த விதத்துல பாபு, யோகி படத்துக்கப்றம் யோகி பாபுன்ற ஒரு அவதாரம் எடுக்குறாரு.
அடியாள், கூட்டத்தில் ஒருவர்னு குட்டி குட்டி கதாபாத்திரங்கள்ல ஆரம்பிச்சி கொஞ்ச கொஞ்சமா தனக்குள்ள இருக்குற காமெடியன் யோகிபாபுவ வெளிப்படுத்துறாரு. 2014-ல தொடர்ச்சியா 7 திரைப்படங்கள் நடிக்கவும் செய்றாரு.
அதுல ‘மான் கராத்தே’ அவரோட காமெடி பயணத்துக்கு ஒரு திருப்புமுனையா அமையுது. அதே வருடம் வெளிவந்த ‘யாமிருக்க பயமே’ படத்துல ‘பண்ணி மூஞ்சி வாயன்’ கதாபாத்திரத்துல நடிச்சிருப்பாரு. அந்த கதாபாத்திரம் அவருக்கு மேலும் வரவேற்புகளை அள்ளிக்கொடுக்க ஆரம்பிச்சுது.
அது மூலமா நம்ம எல்லாருக்கும் பரிட்சயமான நடிகரா யோகி பாபு உருவெடுக்க ஆரம்பிச்சாரு. தமிழ் திரை உலகத்துல பல காமெடி நடிகர்கள் இருக்காங்க. அதுல எப்பவுமே நம்ம மனசுல நீங்க இடம் பெற்றிருக்கும் திரு நாகேஷ், செந்தில், கவுண்டமணி , பத்மஸ்ரீ விவேக், வைகைப்புயல் வடிவேலு இவங்க வரிசையில நம்ம மனசுக்கு மிகவும் நெருக்கமான காமெடி நடிகரா மாறிருக்காரு நம்ம யோகி பாபு.
அவரு ஒரு படி அதிகமா போய் காமெடி ஹீரோவா ஒரு அவதாரம் எடுத்தாரு. 2018-ல ரிலீஸ் ஆன ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்துல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நம்ம யோகி பாபுவ ஹீரோவா அறிமுகப்படுத்துனாரு.
அதுக்கப்பறம் தர்மப்பிரபு, கூர்க்கா, ஜாம்பி, மண்டேலா போன்ற படங்கள்ல அவரு ஹீரோவா நடிச்சு தமிழ் சினிமால தன்னோட கால்தடத்தை ஆழமா பதிச்சிருக்காரு. இப்போ அவரு Bollywood King ஷாருக்கான் கூட ஒரு திரைப்படம் பண்ணிட்டு இருக்காரு.
2020-ல கலைமாமணி விருதும் பெற்று நம்ம எல்லாருக்கும் முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்க முடியும்ன்றதுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டா மாறிருக்காரு நம்ம யோகிபாபு. கலைமாமணி யோகி பாபுவிற்கு சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துகள்.
Article By RJ Jae