பெரியவர்களின் பெயருடன் திரு, திருமதி என்றோ அல்லது ஸ்ரீ ஸ்ரீமதி என்றோ சேர்த்து அழைக்கிறோமே ஏன்?
திரு, திருமதி என்றோ ஸ்ரீ, ஸ்ரீமதி என்றோ பெயருடன் சேர்த்து அழைப்பது மரியாதை, கௌரவம் மற்றும் புனிதத்தன்மையைக் காட்டுவது ஆகும். ஒரு புனிதமான, மங்களகரமான வார்த்தையாகக் கருதப்படுவதினாலும் அப்படி சேர்த்து அழைக்கப்படுகிறது.
மேலும், செல்வமும், மங்களமும் நிறைந்தவராக அழைக்கப்படுபவர் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் அதில் வெளிப்படுகிறது. திரு’ என்பது ஆண்களுக்கும், ‘திருமதி’ என்பது திருமணமான பெண்களுக்கும், ‘ஸ்ரீ’ என்பது செல்வத்தின் தெய்வமான லட்சுமியைக் குறிக்கும் “ஸ்ரீதேவி” என்பதிலிருந்து வந்ததால், இது ஒரு நபரின் மீதுள்ள மரியாதையை வெளிப்படுத்தவும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் மார்பிலே லட்சுமி நித்திய வாசம் செய்வதினால் அவருக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். இறைவனோடு லட்சுமி இணைபிரியாமல் எப்போதும் இருக்கிறார் என்பதினால் திரு…மால் என்று இறைவனுக்கு பெயராம். பெரியவர்களை குறிப்பிடும்போது மரியாதை கருதி மட்டும் திரு சேர்ப்பதில்லை. திருமகளின் அருளும் பொருளும் அவர்களை சேர வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இந்த அடைமொழியை சேர்க்கிறோம் என்கிறார்கள் நம் முன்னோர்கள்.
Article By – “சூரியோதயம் “என். செல்வராஜ்

