கனா கண்ட 100 மில்லியன் !!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி திரைப்படம் கனா..

மரகதநாணயம் திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான Dhibu Ninan Thomas இசையில் வெளிவந்த கனா திரைப்பட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.. முக்கியமாக ஒத்தையடி பாதையிலே பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

இணையத்தில் அதிகம் தேடி தேடி பார்க்கப்பட்ட பாடலான “ஒத்தையடி பாதையிலே” பாடல் 100 மில்லிய பார்வையாளர்களை பெற்ற பாடலாக உள்ளது…

இந்த மகிழ்ச்சியான செய்தியை ட்விட்டரில் #100MViewsForOthaiyadiPathayila என்று பகிர்ந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் இப்பாடலை பாடிய அனிருத்திற்கு நன்றியையும் பகிர்ந்துள்ளார்… இப்பாடலின் ரசிகர்களும் இதை பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.