Specials Stories

2019-ன் சிறந்த பத்து ஆல்பம்

2019-ஆம் ஆண்டு பல படங்களும் அதன் ஆல்பங்களும் வெளியாகியது. அவற்றுள் சிறந்த பத்து ஆல்பங்களின் தொகுப்பு தான் இந்த கட்டுரை.

பிகில் (2019)

இசைப்புயலின் இசையை ராசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் தளபதி விஜயின் பிகில் படத்தின் மொத்த ஆல்புமும் பட்டி தொட்டியெல்லாம் சூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் வெறித்தனம் பாடலை பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி பெண்களின் பெருமையை எடுத்து சொல்லும் வகையில் சிங்கப்பெண்ணே பாடலும் அமைந்திருக்கும்.

நம்ம வீட்டு பிள்ளை (2019)

சிவகார்த்திகேயன் – டி. இமான் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டையை கிளப்பும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவ்வகையில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அமைந்த அணைத்து பாடல்களும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

உன் கூடவே பொறக்கணும், எங்க அண்ணன் போன்ற பாடல்கள் அன்னான் தங்கச்சிகள் மத்தியில் பிரபலமான பாடலாக மாறிவிட்டது.

தர்பார்

சூப்பர்ஸ்டார் படத்தில் எப்பொழுதுமே பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2020-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் தர்பார் திரைப்படத்தின் பாடல்கள் ரிலீஸாகி வெறித்தனமாய் ஹிட் ஆகி உள்ளது.

ஏற்கனவே தலைவர்-அனிருத் கூட்டணியில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் பட்டையாய் கிளப்பியதால் இப்படத்திலும் அந்த கூட்டணி மாஸான பாடல்களை கொடுத்துள்ளது.

அசுரன் (2019)

தனுஷின் அசுரத்தனமான நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் தான் அசுரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கதைக்கேற்ப விறுவிறுப்பை கூடும் வகையில் அமைந்தது.

ஏற்கனவே தனுஷ்-ஜி.வி. கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம் படங்களை போல அசுரன் படத்தின் ஆல்பமும் வேற லெவெலில் அமைந்தது.

நட்பே துணை

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை படத்திற்கு அவரே இசையமைத்து அதில் வெற்றியும் பெற்றார். இப்படத்தில் அமைந்த சிங்கள் பசங்க, கேரளா சாங் பாடல்கள் ரசிகர்களை துள்ளித் திரிய வைக்கும் வகையில் அமைந்தது.

இப்படத்தில் அமைந்த வேங்கை மவன் பாடல் திரையில் வரும்பொழுது விசில்களும் கைதட்டல்களும் ஆரவாரமாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மெஹந்தி சர்க்கஸ்

கேட்போரின் காத்துக்கினிய மெலடி பாடல்களை ஒரு போதும் ஷான் ரோல்டன் தர மறுத்ததே இல்லை. அவ்வகையில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் அமைந்த காதல் பாடல்கள் அனைவரையும் உருக வைக்கும்படி அமைந்தது.

இப்படத்தில் அமைந்த கோடி அருவி பாடல் உலக காதலர்களின் Favorite ஆக அமைந்தது.

கோமாளி

ரசிகர்களை துள்ளித்திரியவைக்கும் பாடல்களை கொடுப்பதில் ஹிப் ஹாப் ஆதி வல்லவர். அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்த ஆல்பம் தான் கோமாளி.

இப்படத்தில் அமைந்த அணைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த ஆண்டின் மெகா ஹிட்டான ஆல்பங்களில் கோமாளிக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

என்.ஜி.கே

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த படம் தான் என்.ஜி.கே. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசை யுவன் ஒரு பின்னணி இசையின் அரசர் என்பதை உணர்த்தும்.

அதுமட்டுமின்றி இப்படத்தில் அமைந்த அன்பே பேரன்பே பாடல் அனைவரையும் மயக்கும் பாடலாக சித் ஸ்ரீராம்-ஸ்ரேயா கோஷல் குரலில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

கடாரம் கொண்டான்

தனக்குரிய தனித்துவமான இசையால் இசை ரசிகர்களை கவர்ந்தவர் ஜிப்ரான். இவரது இசைக்கனவே தனி ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் இந்த வருடத்தின் சிறந்த ஆல்பங்களில் ஒன்றான கடாரம் கொண்டான் ஆல்பத்தை அனைவரும் ரசிக்கும் வகையில் அமைத்துள்ளார்.இப்படத்தில் அமைந்த வேறெதுவும் தேவை இல்லை பாடல் சூப்பர் ஹிட் மெலோடியாக மாறியது

பக்ரீத்

பக்ரீத் படத்தின் பின்னணி இசை தான் அப்படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது என்றே கூறலாம். டி.இமானின் இசையில் அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.

இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய ஆலங்குருவிகளா பாடல் கேட்போரை அன்பின் ஆழத்தில் தாலாட்டுவது போல அமைந்திருக்கும்.