Specials Stories

2020-ன் சிறந்த 10 பாடல்கள் இதோ !!!

2020-ஆம் ஆண்டு நம் மனதை விட்டு நீங்காத பல பாடல்கள் வெளிவந்தன. துள்ளாட்டம் போட வைக்கும் குத்து பாடல்கள், மனதை வருடும் மெலடி பாடல்கள், சிந்திக்க வைத்த கருத்துப் பாடல்கள் என பல விதமான பாடல்கள் வெளிவந்தது. அவற்றுள் சிறந்த 10 பாடல்களின் தொகுப்பே இப்பதிவு.

செல்லம்மா

சமீபத்தில் நம்மை துள்ளாட்டம் போட வைத்த சூப்பர்ஹிட் பாடல் ‘டாக்டர்’ படத்தின் செல்லம்மா பாடல். சிவகார்த்திகேயனின் Peppy (துள்ளித் திரிய வைக்கும் ) வரிகள், அனிருத்-ன் Peppy குரலுக்கு ஏற்ப அமைந்து இந்த ஆண்டின் சிறந்த Peppy Number-ஐ Deliver செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

பாக்கு வெத்தலை

Festival mode என்றாலே எல்லோருக்கும் சமீபத்தில் ஞாபகம் வரும் பாடல் ‘தாராள பிரபு’ திரைப்படத்தில் அமைந்த ‘பாக்கு வெத்தலை’ பாடல் தான். அனிருத்தின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் கேட்கும் அனைவரையும் ஒரு கல்யாண Mode-ற்கு கொண்டு சென்றது என்றே கூறலாம். விக்னேஷ் சிவனின் வரிகள் பாடலை கேட்கும் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது.

காட்டு பயலே

ரவுடி பேபி பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி ‘தீ’ தான் ‘காட்டு பயலே’ பாடலையும் பாடியுள்ளார். பாடலாசிரியர் சிநேஹனின் வரிகள் அனைத்தும் இப்பாடலுக்கு உயிர் ஊட்டும் விதத்தில் அமைந்துள்ளது. வித்தியாசமான பாடல்களை இசை அமைத்து வெற்றி பெறுவது ஜி.வி பிரகாஷுக்கு கைவந்த கலை. அந்த வகையில் இப்பாடலும் கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், காதுக்கு இனிமையாக அமைந்து உள்ளது.

வாத்தி கம்மிங்

‘மாஸ்டர்’ படத்தின் ஒவ்வொரு update-ம் ரசிகர்களை கொண்டாட வைத்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பும் பாடல்களாக அமைந்துள்ளது. குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் தளபதி ரசிகர்கள் பலரின் காலர் Tune-ஆக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்பாடலின் அனிருத்தின் அதிரடி beat-கள் ஆரவாரத்தை கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.

ரகிட ரகிட

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த ‘ரகிட ரகிட’ பாடல் கேட்போரை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இப்பாடலுக்கு விவேக் அவர்கள் வரிகளை எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் தீ-யுடன் இணைந்து தனுஷும் இப்பாடலை பாடியுள்ளார்.இப்பாடலில் அமைந்த “எனக்கு ராஜாவானான் வாழுறேன், எதுவும் இல்லன்னாலும் ஆளுறேன்” போன்ற வரிகள் தனுஷின் குரலில் ஒலிக்கும்போது அதைக் கேட்போருக்கு புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இந்த ஆண்டின் Whatsapp status-ல் அதிகம் ஒலித்த பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது.

Break Up Song

‘நான் சிரித்தால்’ திரைப்படத்தில் அமைந்த இப்பாடலின் வித்யாசமான வரிகளும் Beat-களுமே இப்பாடலை சூப்பர்ஹிட் பாடலாய் மாற்றியுள்ளது. இதுபோன்ற ஒரு Love Failure-ஐ கொண்டாடும் பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் இசையும் குரலும் நம்மை அதிரவைத்து ஆட்டம் போட வைத்தது.

கதைப்போமா

‘சித் ஸ்ரீராம்’ குரலில் வெளிவரும் பாடல்கள் கண்டிப்பாக சூப்பர்ஹிட் பாடல்களாக தான் அமையும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் அமைந்த ‘கதைப்போமா’ பாடல் இந்த ஆண்டின் ஒரு சிறந்த மெலடியை நமக்கு கொடுத்துள்ளது. கேட்போரை உணர்வுபூர்வமாக Attack செய்யும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

என்னை விட்டு எங்கும் போகாதே

‘மசாலா காபி’ Band குழுவினரின் இசையில் அமைந்த இப்பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தின் ஒரு முக்கிய பாடலாக அமைந்தது. இப்படம் வெளிவந்த பின்னர் இப்பாடல் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள வரிகள் காதலர்களுக்கு Boost தரும் வகையில் அமைந்தது.

தமிழன் பாடல்

‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் டீஸரிலேயே இந்த பாட்டின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். S.தமன் இசையில் அனந்து மற்றும் தீபக் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர். பாடலாசிரியர் யுகபாரதி தமிழை பற்றியும், தமிழன் பற்றியும், சிம்புவின் மாஸ் பற்றியும் புட்டு புட்டு வரிகளை பொறித்து வைத்துள்ளார்.” உதட்டுல நமக்கு தமிழ் இருக்கு, உசுரையும் கொடுக்குற உறவிருக்கு ” என ஒரு வரியில் தமிழையும், தமிழனையும் யுகபாரதி பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறார். இந்த ஆண்டின் ஒரு மாஸ் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.

காத்தோடு காத்தானேன்

ஜி.வி.பிரகாஷ் குமார் இசை என்றாலே பாடல்கள் இனிமையாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஜெயில் படத்தின் ‘ காத்தோடு காத்தானேன்’ பாடல் கேட்போரை மெல்லிசை தாலாட்டில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. தனுஷின் இனிமையான குரலும், அதிதி ராவின் மென்மையான குரலும் இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் உள்ளது.

இந்த ஆண்டின் சிறந்த பத்து பாடல்களாக மக்கள் கொண்டாடிய பாடல்கள் இவையே. இதை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த 2020-ன் பாடல்கள் ஏதேனும் இருந்தால் அதை கமெண்ட் Box-ல் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.