Specials Stories

2020-ன் சிறந்த 5 நடிகைகள் !!!

2020-ஆம் ஆண்டு பல படங்கள் வெளிவந்தன. பல கதாநாயகிகளும் பல்வேறு கதாபாத்திரங்களில் வலம் வந்தனர். அவர்களுள் இந்த ஆண்டின் மக்கள் மனதில் நின்ற சிறந்த 5 நடிகைகளின் பட்டியலை கீழே காணுங்கள்.

ஜோதிகா

இந்த ஆண்டில் வெளிவந்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் ஜோதிகாவின் வெண்பா கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜோதிகா, அணைத்து படங்களிலும் தன் தனித்துவமான திறமையான நடிப்பை வெளிப்படுத்த தவறியதே இல்லை. ஜோதிகா இதுபோன்ற வித்யாசமான, துணிச்சலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

நடிகையர் திலகம் திரைப்படத்தின் வெற்றியையும், வரவேற்பையும் தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நடித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு பென்குயின், மிஸ் இந்தியா என இரு படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். இந்த இரு படங்களுமே Heroine centric படங்கள் தான். இந்த ஆண்டின் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகளில் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு முக்கிய இடத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும்.

நயன்தாரா

சிறந்த கதாநாயகிகளின் பட்டியலை எடுக்கும் போது லேடி சூப்பர்ஸ்டாரின் பெயரை நம்மால் தவிர்க்கவே முடியாது. இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே நயன்தாரா சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து RJ பாலாஜியின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்தார். இந்த இரு படங்களிலுமே வெவ்வேறு கதாபாத்திரங்களை தன் தத்ரூபமான நடிப்புத் திறமையை கொண்டு நயன்தாரா கையாண்டிருப்பார். வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறந்த நடிகைகள் பட்டியலில் ஒரு முக்கிய இடத்தை நம் லேடி சூப்பர்ஸ்டார் பிடித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி

இளைஞர்கள் மனதை கவர்ந்த கதாநாயகியாக இந்த ” வெய்யோன் சில்லி ” நாயகி கோலிவுட்டில் வலம் வர தொடங்கியுள்ளார். சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்த இவர் தன் வெறித்தனமான நடிப்பாலும், Cute-ஆன Reaction-கள் மூலமும் பார்ப்பவர்கள் மனதை கொள்ளையடித்துள்ளார் என்றே கூறலாம்.

ஊர்வசி

கதாபாத்திரங்களாக நடிக்கச் சொன்னால், அந்த கதாபாத்திரமாகவே வாழும் வழக்கத்தை கொண்டவர் ஊர்வசி. 2020-ல் புத்தம் புது காலை, சூரரை போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய மூன்று தமிழ் படங்களிலுமே ஊர்வசியின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சூரரைப் போற்று திரைப்படத்தின் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசி அவரது நடிப்பால் நம்மை உருக வைத்தார் என்றே சொல்லலாம்.

இவர்களை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த 2020 நடிகைகளை Comment Box-ல் பதிவு செய்யுங்கள்.