Cinema News Stories

5 years of ‘Indru Netru Naalai’

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்த வெற்றிப்படம் இன்று நேற்று நாளை. இப்படம் வெளியாகி இன்றுடன் (ஜூன் 26, 2020) ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

பொதுவாக Science Fiction படங்கள் ஹாலிவுட்டில் தான் அதிகமாக இருக்கும். தமிழ் ரசிகர்கள் வித்தியாசமான  கதைகளை ஏற்பார்களா என்ற சந்தேகம் இருந்த சூழலில் இன்று நேற்று நாளை திரைப்படம் அதை உடைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பர். ஹிப் ஹாப் ஆதி இசையில் அமைந்த பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் திரைக்கதைக்கு ஏற்ப பொருந்தி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.

டைம் ட்ராவல் செய்ய கூடிய நவீன கருவி ஒன்று விஷ்ணுவுக்கும் கருணாகரனுக்கும் கிடைக்க அதனால் அவர்கள் அனுபவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் என்னென்ன என்பதை நோக்கி இப்படத்தின் கதை அமைந்திருக்கும். 2065-ல் இருந்து காலப் பயணம் செய்யும் முயற்சி தோல்வி அடைவதால் விஷ்ணு விஷாலுக்கு இந்த கருவி கிடைத்து இருக்கும்.

இறுதியில் நம் வாழ்வை ஸ்வாரஸ்யமாக்க எந்த ஒரு காலப் பயணக் கருவியும் தேவை இல்லை, உள்ளது உள்ளபடி இருந்தாலே வாழ்க்கை நன்றாக தான் இருக்கும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் படத்தின் கிளைமாக்ஸ் அமைந்து இருக்கும். இப்படம் விஷ்ணு விஷாலுக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இப்படத்தில் 2065-ஆம் ஆண்டு அராய்ச்சி நடத்தும் விஞ்ஞானியாக ஆர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். A.வசந்தின் ஒளிப்பதிவு இப்படத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை இயக்கி வருகிறார். அப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் வெற்றி ‘அயலான்’ திரைப்படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.