என் வாழ்க்கைல ரொம்ப முக்கியமான முடிவு ‘டாக்டர்’ படத்துக்கு ஓகே சொன்னது! – வினய்

Vinay-Rai

சமீபத்தில் நடிகர் வினய் சூரியன் FM-க்கு அளித்த நேர்காணலில் நிறைய சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடம் வில்லனாக தொடர்ந்து நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் “துப்பறிவாளன் படத்துல எனக்கு வாய்ப்பு கிடைச்சுது. அந்த சமயத்துல விஷால் கூட என்கிட்ட கேட்டாரு. உனக்கு வில்லனா நடிக்க ஓகேவா அப்டினு. மிஷ்கின் சார் டைரக்‌ஷன்ல நடிக்கனும்னு ஓகே சொன்னேன். துப்பறிவாளன் படத்துல ஆண்ட்ரியா, பாக்யராஜ் சார்னு ஒரு நல்ல டீம் கூட வேலை பார்த்தேன்.

3 வருஷம் கழிச்சு நெல்சன் கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. டாக்டர் படத்துல வில்லன் கதாபாத்திரத்துக்கு கேட்டிருந்தாங்க. நான் உடனே, எனக்கெதுக்கு வில்லன் கதாபாத்திரம் மட்டுமே தரீங்கனு கேட்டேன். ஏன்னா ‘என்றென்றும் புன்னகை’ படத்துல ஜீவா கூட ப்ரெண்டா நடிச்சிருக்கேன்.

Image

எந்த கேரக்டர் குடுத்தாலும் நடிக்க தயாரா இருக்கேன். ஒரு நடிகனா என்னோட வேலை குடுக்குற கதாபாத்திரத்துல நடிக்குறதுதான். நான் வில்லனா நடிச்ச சமயத்துல வேற யாரும் ஆள் கிடையாது. நான் உள்ள வந்துட்டேன். என் வாழ்க்கைல நான் பண்ண நல்ல விஷயம் டாக்டர் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டது தான்.

ஷூட்டிங் நடந்த ஒவ்வொரு நாளும் மறக்கவே முடியாது. முதல் நாள்ல இருந்து கடைசி நாள் வரைக்கும் சிரிச்சுட்டே இருந்தோம். ரொம்ப ஜாலியான டீம் அது.” என்று பதிலளித்தார். மேலும் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து தற்போது வில்லனாக நடித்துக் கொண்டிருப்பது வரையில் அவரது சினிமா பயணத்தில் நடந்த பல்வேறு விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்:

Article By MaNo