Cinema News Specials Stories

நடிப்பின் நாயகி, நாட்டியப் பேரொளி ‘பத்மினி’

Padmini

தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாம வடஇந்தியா, சிங்களம், ரஷ்யானு எட்டுத்திக்கும் கலக்குன இவங்க திருவான்கூர்னு அழைக்கப்பட்ட அன்றைய திருவனந்தபுரத்துல பிறந்து தன்னோட திருவான்கூர் சகோதரிகளோட சேர்ந்தே நாட்டியத்தை கத்துக்கிட்டாங்கனு சொல்றத விட நாட்டியம் தான் இவங்கள ஆட்கொண்டுச்சுனு சொல்லலாம்.

தமிழ்நாட்டோட பரதநாட்டியம், கேரள நாட்டிய கலைகள்னு எதையுமே விட்டு வைக்காத இவங்க 16 வயசுல இருந்தே சினிமாலையும் எந்த தரப்பையும் விட்டு வைக்கல… Kollywood, Mollywood, Tollywood, Sandalwood, Bollywood-னு இந்திய சினிமாவுல 1950-களில் ஆரம்பிச்சு தொடர்ந்து 30 வருஷம் ராணியா வலம் வந்த இந்த நாட்டிய மங்கை பல படங்கள்ளையும் ராணியா தான் Role play பண்ணி இருக்காங்க.

தமிழ்நாட்டுல சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எம் ஜி ஆர், தெலுங்குல N. T. ராமராவ், கன்னடால ராஜ்குமார், மலையாளம்ல சத்யன், பிரேம் நஜிர்னு அப்போதைய இந்திய சினிமா Stars-க்கு இணையான Performance-அ குடுத்த இவங்கள நாட்டிய பேரொளினு அழைச்சா பத்தாது… நடிப்பு பேரொளினும் தான் சொல்லணும்.

Image

அதுக்கு கல்வெட்டுல பொறிச்ச மாதிரி புதைஞ்சாலும் புதையலா தெரியுற சான்றுகளா மோகனாவா வந்து மதி மயக்குன தில்லானா மோகனாம்பாள், செல்வியா தெறிக்க விட்ட தங்கப்பதுமை, எதிர்பாராத படம் மூலமா எதிர்பாக்கவே முடியாத Acting-அ குடுத்த Sumathi-ஆ, பூவே பூச்சுடவா படம் மூலமா நம்ம எல்லார்க்கும் Favourite-ஆன பாட்டியா நடிச்ச இல்ல அந்த Character-ஆவே வாழ்ந்த இவங்களோட இந்த தமிழ் படங்கள் எல்லாமே Life-ல ஒரு தடவயாவது பார்க்க வேண்டிய Must watch movies.

நவரசங்கள்ல அசத்துற நடிகர் திலகத்துக்கே Tough குடுத்த இந்த நாட்டிய பேரொளி ‘பணம்’ படத்துல நடிகர் திலகம் கூட இணைஞ்சு நடிக்குற பயணத்தை ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேல அவரோட பணியாற்றி இருக்காங்க.
இவ்வளவையும் தாண்டி இவங்க நாட்டியத்துக்கும் நடிப்புக்கும் நங்கூரம் மாதிரி ஒரு Example-னா வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்துல வைஜெயந்திமாலாவும் இவங்களும் போட்டி போட்டு ஆடுன “கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே” பாட்டு.

Image

அந்த காலத்துலயே 3.6 மில்லியன் (தற்போதைய மதிப்பு படி) box office hit குடுத்த படம். இவ்வளவு பெருமைகளுக்கும் உரிமையுள்ள நடிப்பின் நாயகி நாட்டிய பேரொளி
பத்மினி முப்பது வருஷம் இந்திய சினிமால இணையில்லாத அர்ப்பணிப்ப குடுத்த ஒரு பறந்துபோன பொக்கிஷம்!

Article By RJ THAARA