Cinema News Stories Trending

பிரபாஸின் ஆதிபுருஷ் அப்டேட் !!!

நடிகர் பிரபாஸின் 22-வது படமான ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வைத்து பார்க்கும்போது இப்படம் ஒரு Fantasy திரைப்படமாக இருக்கும் என தெரிகிறது. இப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளியிடப்படும் எனவும் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளது எனவும் இப்படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ராட் இயக்குகிறார்.

இப்படமும் பாகுபலியை போல அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் “தீய சக்திக்கு எதிராக வெற்றி பெற்ற நல்ல சக்தியின் கொண்டாட்டம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் மேலும் எந்தெந்த நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள் எனும் அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என தெரிகிறது.

நடிகர் பிரபாஸ் ஏற்கனவே இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பூஜா ஹெக்டேவுடன் இணைந்து ராதே ஷ்யாம் திரைப்படத்திலும் தீபிகா படுகோன் உடன் இணைந்து பிரபாஸ் 21 எனும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களை குறித்த அப்டேட்டும் பிரபாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு அமையவிருக்கும் ஆதிபுருஷ்  திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இப்போது இருந்தே தீவிரமான எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. பாகுபலியை போன்ற மற்றொரு பிரம்மாண்ட படைப்பை பிரபாஸ் கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது. இப்படத்தை குறித்து படக்குழுவினர் வெளியிட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.