Cinema News Specials Stories

All In All அவதாரம் ‘நாசர்’

Nassar


2K Kids-க்கு இவர பாகுபலி படத்துல வர villain-ஆ தான் தெரியும்.

ஆனா 80’s and 90’s Kids-க்கு இவர படையப்பா படத்துல வர villain-ஆ மட்டும் இல்ல மின்சார கனவு படத்துல ஒரு அற்புதமான supporting artist-ஆ, jeans-ல பயமும் துணிச்சலும் கலந்த double act-ல கலக்குன அப்பாவா, ஔவை சண்முகி-ல வேற level நகைச்சுவை நடிகரா, எம்டன் மகன்-ல எல்லாரும் பாத்து பயந்த ஒரு அப்பாவா, இறுதிச் சுற்று-ல யதார்த்தமான நடிப்ப வெளிப்படுத்துன ஒரு coach-ஆ இவரோட கலைத் திறன் நடிப்போட முடியல.

டைரக்டர் K.பாலச்சந்தரோட கல்யாண அகதிகள் படத்துல குணச்சித்திர நடிகரா ஆரமிச்ச இவரோட கலைப்பயணம் திடீர் திருப்பமா அவதாரம் படத்துல டைரக்டரா இவர அவதாரம் எடுக்க வெச்சுது. அதுல அவரோட நடிப்பயும் தாண்டி அவரோட இயக்கமும் பேசப் பட்டுச்சு.

எம்டன் மகன் படத்துலயும், தெய்வத் திருமகள் படத்துலயும் இவரு climax-லயாவது கொஞ்சம் கருணை காட்டா மட்டாரா-னு அத்தனை பேரும் எதிர்பார்த்து காத்திருந்த கடைசி நிமிஷத்துல எல்லாரையும் கண் கலங்க வெச்ச அவரு நடிப்பு juries மனசையும் மெழுகா உருக வெச்சதாலையோ என்னமோ அவருக்கு அந்த 2 படங்களுமே Tamilnadu state film award-அ வாங்கி குடுத்துது.

வாழ்க்கையோட திடீர் திருப்பங்கள் மூலமா இவரு air force-ல பணியாற்றுன பிறகும் cinema துறைல கால் பதிச்சிருந்தாலும் இன்னைக்கு தென்னிந்திய சினிமாவோட நடிகர் சங்கத்துக்கே அவரு தலைவரா இருக்கிறதுக்கு காரணம் அவரோட நவரசம் கலந்த நடிப்பாற்றல் மட்டுமல்ல… Actor, Villain, Dubbing artist, Director, Producer, Singer இப்படி versatile roles play பண்ற all in all அவதாரமா இருக்குறதாலதான். நிச்சயமா நாசர் sir-அ cinema துறையின் நவரத்தினம்னு தான் சொல்லணும்.

– Article By RJ Akshaya