Cinema News Stories

அரண்மனை 3 First Look இதோ !!!

அரண்மனை திரைப்படத்தின் 3-ஆம் பாகத்தை எதிர்நோக்கி Commercial ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அப்படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளிவந்த சுந்தர்.C திரைப்படங்களை போலவே அரண்மனை 3 படத்திலும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏற்கனவே சுந்தர்.C இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த திகில் படங்களாக அந்த இரு படங்களும் அமைந்தது. அந்த வகையில் மூன்றாம் பாகமும் Commercial ரசிகர்களுக்கு நல்ல தீனி போடும் என்று எதிர்பார்க்கலாம்.

அரண்மனை 3 திரைப்படத்தின் First Look வெளியாகவுள்ளது என்ற update நேற்று (ஏப்ரல் 21, 2021) வந்தபோதே ரசிகர்கள் First Look-ஐ காண தங்களது Waiting Countdown-ஐ தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 22, 2021) காலை 11 மணிக்கு படக்குழுவினர் First look-ஐ வெளியிட்டனர்.

Image

வெளிவந்த first Look-ல் இப்படத்தின் நட்சத்திர பட்டாளம் இடம்பெற்றுள்ளது. அரண்மனை 3 திரைப்படத்தில் சுந்தர்.C-யுடன் இணைந்து ஆர்யா, யோகி பாபு, மனோபாலா, சாக்க்ஷி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் சமீபத்தில் மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களும் நடித்துள்ளார்.

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த C.சத்யா தான் அரண்மனை 3 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை நடிகை குஷ்பு தயாரித்துள்ளார். விரைவில் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். First look வெளியான சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்கள் poster-ஐ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

First Look மட்டுமின்றி அந்த First look-ஐ motion போஸ்டர் ஆகவும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அரண்மனை 3 திரைப்படத்தின் First Look Motion Poster அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.