Cinema News Specials Stories

சின்மயி – Top 10 Songs

1) கன்னத்தில் முத்தமிட்டால் – ஒரு தெய்வம் தந்த பூவே

முதல் பாடலே வெற்றிகரமான பாடலாய் அமைந்தது; இசைக்காகவும், பாடல் வரிகளுக்காகவும் இரண்டு தேசிய விருது பெற்ற பாடல் இது.

2) சிவாஜி – சகானா சாரல்

இது சின்மயிக்கு சிறந்த பாடகிக்கான மாநில விருது பெற்றுத்தந்த பாடல்.

3) ஆதவன் – வாராயோ வாராயோ

இந்த பாடலை ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உன்னிகிருஷ்ணன், மேகாவுடன் பாடி இருந்தார். மூன்று பேர் பாடியிருந்தாலும் இந்த பாட்டு சின்மயிக்கான பாடலாகவே அறியப்படுகிறது.

4) பொக்கிஷம் – நிலா, நீ, வானம்

சபேஷ்-முரளி இசையில் சின்மயி பாடிய இந்தப் பாடல் எல்லோரும் ரசிக்கும் மெலடி. இயக்குநர் சேரனுக்கு மிகவும் பிடித்த பாடல்.

5) எந்திரன் – கிளிமாஞ்சாரோ

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சின்மயி பாடிய இந்த பாடல் அவருக்கு பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்த பாடல்.

6) வாகை சூடவா – சர சர சாரகாத்து

இசையமைப்பளர் ஜிப்ரானின் அறிமுக படமான இந்த படத்தில் அவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்த இந்த பாடலை சின்மயி பாடி இருந்தார். சின்மயினுடைய குரலில் அமைந்த இந்த பாடல் வாகை சூடவா படத்தின் அடையாளம்.

7) நண்பன் – அஸ்கு லஸ்கா

கார்க்கியின் பாடல் வரிகளில் 16 மொழிகளுக்கும் மேற்பட்ட வார்த்தைகள் அமைந்த இந்த பாடலை அந்த சொற்களின் உணர்வு மாறாமல் பாடி அசத்தி இருப்பார் சின்மயி.

8) ஐ – என்னோடு நீ இருந்தால்

ஐ படத்தில் இருந்த இந்த பாடலை சுனிதா சாரதி சித் ஸ்ரீராம் பாடி இருந்தார். ஆனால் அதன் ரிபிரைஸ் வெர்சனை சின்மயி பாடி இருந்தார். அந்த பாடல் பலருக்கும் பிடித்த பாடல்.

9) 96 – காதலே காதலே

இந்த படத்தில் உள்ள பாடல்களில் பெண்குரல் பகுதியை அவர் பாடியிருந்தார். அதிலும் காதலே காதலே பாடல் எல்லாருடைய பழைய காதலையும் நினைவு கூர்கிற பாடலாய் அமைந்தது.

10) 24 – நான் உன் அழகினிலே

சின்மயி குரலில் மெலடி வரிசையில் முக்கியமான பாடல்; இந்த படத்தில் சமந்தாவுக்கு அவரே பிண்ணனி குரல் கொடுத்து இருந்ததால் இந்த பாடல் சமந்தா பாடியதை போல அவ்வளவு பொருத்தமாக இருக்கும்.

Article By Suryan FM Madurai