Cinema News Stories

மெகா ஸ்டாரும் மோஹன் ராஜா-வும் !!!!

ஜெயம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய மோகன் ராஜா தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து அவரது 153வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்ராஜா வெளியிட்டுள்ளார்.

2001ஆம் ஆண்டு தன் முதல் படமான அனுமான் ஜங்ஷன் எனும் திரைப்படத்தை மோகன் ராஜா தெலுங்கு மொழியில் இயக்கி சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார். அதற்குப் பின் தமிழ் படங்களை மட்டுமே இயக்கி வந்த மோகன்ராஜா தற்போது டோலிவுட் திரையுலகில் சிரஞ்சீவியுடன் கை கோர்த்து தெலுங்குவில் Comeback  கொடுக்க உள்ளார்.

இப்படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக் ஆக இருக்கும் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றனர். 2017 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த வேலைக்காரன் திரைப்படமே மோகன்ராஜா கடைசியாக இயக்கிய திரைப்படம். மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பின் மோகன்ராஜா சிரஞ்சீவியின் 153-வது படத்தை இயக்க இருப்பதால் இப்படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கிவிட்டது.

மோகன் ராஜா வெளியிட்டுள்ள பதிவில் “நான் மெக்கா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து இயக்க மிகவும் பெருமைப்படுகிறேன், உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ராஜாவின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.