Cinema News Interview Stories

போகாதே பாட்டு ஆரம்பத்துல யாருக்குமே பிடிக்கல! – இயக்குநர் எழில்

Pogathey

யுத்த சத்தம் பட வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் எழில் மற்றும் படத்தின் நாயகி சாய்ப்ரியா தேவா இருவரும் சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றனர்.

அப்போது அவரிடம் யுத்த சத்தம் படம் குறித்த பல்வேறு விஷயங்களை பேசினோம். இடையில் அவர் இயக்கிய தீபாவளி படம் குறித்து பேசும் போது அப்படத்தில் இடம்பெற்ற ‘போகாதே’ பாடலின் வெற்றி குறித்து கேள்வியெழுப்பினோம். அதற்கு பதிலளித்த அவர், “யுவன் இசையமைத்த பாடல்களிலேயே மிகவும் மெதுவான பாடல் அது. ட்யூனாக கொடுத்த போது மிக மிக மெதுவாக இருந்தது.

ஆத்யாரே என்ற வார்த்தையை போட்டு தான் அந்த பாடலுக்கு ஆரம்பத்தில் இசையமைத்தார். நா.முத்துக்குமாரும் நானும் அதை வைத்து சுத்திக் கொண்டிருந்தோம். நா.முத்துக்குமார் நான் நன்றாக பாடல் எழுதி தருகிறேன், நல்லா வந்துடும் சார் என்றார். நான் இல்லை பயமாக இருக்கிறது என்றேன். லிங்குசாமி இந்த ட்யூனை கேட்டுவிட்டு Second half முடிவில் வரக்கூடிய பாடல் இது. இந்த பாடலுக்கு எல்லாரும் எழுந்து சென்று விடுவார்கள். ட்யூனை மாற்றுங்கள் என்று கூறிவிட்டார். நான் யோசித்துக் கொண்டே ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனிடம் கேட்டேன், சத்தியமா இது வேண்டவே வேண்டாம் என்றார்.

ஆனால் எனக்கு மட்டும் இந்த பாடலில் ஏதோ Haunting ஆக இருந்தது. நேராக யுவனிடம் சென்றேன், ஆத்யாரே என போட்டிருக்கிறீர்கள் இது ஏதோ சரிவராது என தோன்றுவதாக கூறினேன். உடனே யுவன் “சரி போகாதேனு மாத்திக்கோங்க, முத்து எழுதி குடுப்பா” என Cool-ஆக கூறினார். போகாதே என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு முத்துக்குமார் எழுதினார். பின்னர் யுவனின் குரலில் பாடும் போது அந்த பாடலே Magic-ஆக இருந்தது. யுவன் ஒரு சிறந்த இசையமைப்பாளர்” என்று கூறினார்.

மேலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo