பிருந்தா மாஸ்டர் கோரியோவை பார்த்து எழுந்து நின்று கைதட்டிய மணிரத்னம்!

பிருந்தா மாஸ்டர், கோவிந்த் வசந்தா மற்றும் மதன் கார்க்கி ஆகியோர் சமீபத்தில் கொடுத்த சூரியன் FM டிஜிட்டலுக்கு நேர்காணல் கொடுத்தனர். அப்போது கடல் படத்தில் இடம்பெற்ற அடியே பாடல் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார் பிருந்தா மாஸ்டர்.

அந்த பாடல் உருவான விதம் குறித்து பேசத் தொடங்கிய அவர், “இந்த மாதிரி ஒரு பாட்டு கிடைக்காது. மணி சார் எனக்கு கொடுத்தார். நான் மிக மெதுவாக பாடலுக்கான நடனத்தை அமைத்தேன். வருவேன், ஒரு நாளைக்கு 2 பீட் ஆடி முடித்து விட்டு கிளம்பி விடுவேன்.

மெதுவாக பல்லவி முடித்துவிட்டு மணி சாரை கூப்பிட்டு ஒரு முறை பாருங்கள் என பாடலை போட்டு காண்பித்தேன். பார்த்ததும் அவருக்குப் பிடித்து விட்டது. பண்ணுங்க மாஸ்டர் என்று சொல்லி சென்று விட்டார்.முதல் முறை ஏ.ஆர்.ரஹ்மான் சார் எனக்கு பாடலை அனுப்பிய போது வரிகள் மட்டுமே இருந்தது. மியூசிக் குறைவாக இருந்தது. ஷூட்டிங் சென்று கோரியோ செய்யும் போது பாடலில் பல்வேறு இசைகள் சேர்ந்து பிரம்மாண்டமாக இருந்தது. எனவே மேலும் ஒரு நாள் வேண்டுமென கேட்டு கோரியோ செய்தேன்.

பாடல் முழுமையாக முடிந்த பிறகு மணி சார் எழுந்து கை தட்டினார். அற்புதமான கோரியோகிராபி என்றார். அதுவே போதும். வேறு எந்த விருதும் தேவையில்லை” என்று கூறினார். மேலும் தற்போது அவர் இயக்கியுள்ள ‘ஹே சினாமிகா’ படம் குறித்த சில அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :

Article By MaNo

About the author

MaNo