Specials Stories Viral

என்னது Suryan Idol-ல ஜெயிச்சா பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசா?

Suryan-Idol

Suryan Idol-னா என்ன அப்படினு கேக்குறிங்களா? வாங்க விளக்கமா சொல்றேன்.

Suryan Idol அப்படிங்குற தலைப்புல சூரியன் FM சார்பில் மொத்தம் 3 போட்டிகள் நடத்தப் போறோம்.

என்னென்ன அப்படினா 1. பாடல், 2. நடனம் மற்றும் 3. பேச்சுப் போட்டி. இதுல ரொம்ப முக்கியமான விஷயம் வயது வித்தியாசமே இல்லாம போட்டியில யார் வேணாலும் கலந்துக்கலாம்.

பாட்டுப் போட்டிய பொறுத்த வரைக்கும் எந்த தமிழ் பாடல்கள் வேணும்னாலும் பாடலாம். டான்ஸ பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமா பாடல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேச்சுப் போட்டிய பொறுத்த வரைக்கும் ‘தமிழ் ஏன் சிறந்த மொழி?’ என்ற தலைப்பில் மட்டுமே பேச வேண்டும்.

போட்டியில கலந்துக்குறதுக்கான மத்த விதிமுறைகள் என்ன? அதுக்கு அடுத்ததா என்ன செய்யனும் அதையெல்லாம் இப்ப சொல்றன்.

Image
  • பாடல், நடனம் மற்றும் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் 1 நிமிடத்திற்குள் உங்கள் வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.
  • சூரியன் FM Whatsapp எண் 86680 95588-ஐ உங்கள் மொபைலில் save செய்து, Whatsapp-ல் ‘Hi Suryan FM’ என மெசேஜ் அனுப்பவும்.
  • பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இறுதியாக உங்களது வீடியோவை அப்லோட் செய்யவும்.
  • வீடியோவில் ஒருவர் மட்டுமே தெரிய வேண்டும்.
  • ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • எந்த போட்டிக்கும் வயது வரம்பு கிடையாது.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சூரியன் FM இன் ‘Suryan Idol’ வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையை உலகறிய செய்யுங்கள். அட்டகாசமான பல பரிசுகளை வெல்லுங்கள்.

மேலும் Suryan Idol போட்டிகளின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை பின்பற்ற சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களில் இணைந்திருங்கள்.

Suryan FM | Suryan FM Twitter | Suryan FM Facebook | Suryan FM Insta | Suryan FM Youtube | Suryan FM Share Chat