Specials Stories

தல – ன் அறிவுரையில் ட்ரோன்!!!

சென்னையில் அமைந்துள்ள M.I.T  கல்லூரியின் ட்ரோன் ஆராய்ச்சிக்குழு தக்ஷாவின் ட்ரோனை தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் கிருமிநாசினி தெளிப்பதற்கு உபயோகித்து வருகிறது. இந்த அணியின் தொழில்நுட்ப பரிந்துரையாளராக நடிகர் அஜித் செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த ட்ரோன் Project-ல் ஏறத்தாழ 70 பேர் கொண்ட குழு பணியாற்றியது. டாக்டர் K. செந்தில் குமார் இந்த திட்டத்திற்கு தலைமை தங்கியுள்ளார். இந்த திட்டத்தில் பல்வேறு விதமான ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டது எனவும், அவற்றை விவசாயம், கண்காணிப்பு பனி போன்ற பல் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் எனவும்  இந்த ட்ரோன்  திட்ட கூட்டாளருள் ஒருவரான அருள் செங்கண் கூறியுள்ளார்.

தற்போது தமிழக அரசுடன் இணைந்து மனிதர்களால் செல்ல முடியாத நெருக்கடியான இடங்களில் கிருமி நாசினி தெளிக்க இந்த ட்ரோன்கள் உபயோகப்படுகிறது. கிருமி நாசினி தெளிப்பதற்காகவே பிரத்யேகமாக இந்த ட்ரோன்கள் வடிவமைக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான ட்ரோன்கள் பெட்ரோல் மூலம் இயங்குகிறது.

கடந்த சனிக்கிழமை ( ஜூன் 20, 2020) அன்று சுமார் 3 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு 900 லிட்டர் கிருமிநாசினி இந்த ட்ரோன்கள் மூலம் தெளிக்கப்பட்டது. இந்த ட்ரோன்களில் கிருமிநாசினி தெளிப்பதற்கேற்ப சிறிய Nozzle (ஓட்டைகள்) பொருகப்பட்டுள்ளது. 

நடிகர் அஜித் தனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம்  இந்த அணியுடன் இணைந்து பரிந்துரையாளாக செயல்படுவாராம். அதுமட்டுமின்றி அவர் வெளிநாடு செல்லும்போதெல்லாம் UAV (Unmanned Aerial Vehicle ) அதாவது ஆளின்றி பறக்கும் வாகனங்கள் பற்றி தகவல்கள் அறிந்து கொண்டு அதை தக்ஷா அணியுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். 

தனது பிஸியான வாழ்க்கை சூழ்நிலையில் நடிகர் அஜித்தின் இச்செயல் பாராட்டத்தக்கது. இந்த தக்ஷா அணி கடந்த ஆண்டு நடந்த ட்ரோன் ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கம் மற்றும் இரு வெள்ளி பதக்கங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Tags