Cinema News Stories

Enemy-ஆக ஆர்யா-விஷால் !!

அவன் இவன் திரைப்படத்தின் வெற்றி Combo-வான ஆர்யா – விஷால் கூட்டணியில் உருவாகவிருக்கும் Enemy திரைப்படத்தின் First Look வெளியாகியுள்ளது.

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் தான் Enemy படத்தை இயக்குகிறார். வெளியிடப்பட்டுள்ள First Look-ல் விஷால் ஒரு நீளமான துப்பாக்கியை ஏந்தி நிற்பது போன்ற ஒரு Silhouette ( நிழற்படம் போல ) புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இப்படம் ஒரு மாஸ் ஆக்ஷன் திரைப்படமாக அமையும் என தெரிகிறது. Enemy திரைப்படத்தின் First Look-ஐ கீழே காணுங்கள்.

Enemy First look
Enemy First Look

மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு S.தமன் இசையமைக்கவுள்ளார். தமன் இசையமைத்த பல பாடல்கள் சமீபத்தில் சூப்பர்ஹிட் ஆனதால் அவரது இசைக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர் அறிவு எழுத்தவுள்ளார்.

Enemy first look வெளிவந்த சில நிமிடங்களில் இருந்தே சமூக வலைத்தளங்களில் பல ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஷால்-ஆர்யா கூட்டணியில் வெளிவந்த அவன் இவன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், Enemy திரைப்படமும் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைய வேண்டும் என்பது சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

இப்படத்தின் தயாரிப்பாளர் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஆர்யாவை mention செய்து, “உங்களது Enemy-ஐ சந்திக்க தயாரா ? ” என பதிவு செய்துள்ளார். இதை வைத்து பார்க்கும் போது ஆர்யாவும் விஷாலும் இப்படத்தில் எதிர் எதிர் துருவங்களில் இருந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. வினோத் குமாரின் ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

கடந்த பத்து ஆண்டுகளில் அவன் இவன், என்னை அறிந்தால், ஜில்லா, மங்காத்தா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற Dual ஹீரோ திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இரண்டு ஹீரோக்கள் நடித்தால் படம் நன்றாக அமையும் என்பது கோலிவுட்டில் ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படத்தில் மேலும் யாரெல்லாம் நடிக்கவுள்ளனர் என்ற update விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு கதாநாயகர்கள் நடிக்கும் திரைப்படம் என்றாலே கதைக்களம் இருவரையும் சமமாக மையப்படுத்தி அமையும் என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இப்படம் விஷால் ரசிகர்களையும், ஆர்யா ரசிகர்களையும் திருப்திப் படுத்தும் நோக்கத்தில் அமையும் என தெரிகிறது.

Enemy திரைப்படம் மக்கள் கொண்டாடும் மெகா ஹிட் படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.