Cinema News Specials Stories

இன்றைய தமிழ் சினிமாவின் இசை ‘அனிருத்’

தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்புல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்துல 2012-ல ‘3’ படம் ரிலீசாகுது. அந்த படத்தோட அத்தனை பாட்டும் பயங்கரமான ஹிட். உலகத்துல இருக்க தமிழ் மக்கள் எல்லோரோட வீடுகள்லயும் இந்த பாடல்கள் தொடர்ச்சியா ஒலிக்குது.

இதுல நம்ப முடியத விஷயம் என்னன்னா அந்த படத்துக்கு இசையமைச்ச அனிருத்க்கு அப்போ வயசு 22 தான். முதல் படத்துலயே தமிழ்நாட்டு மக்கள் எல்லாரையும் தன்னை நோக்கி திரும்பி பாக்க வச்சாரு அனிருத். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா ரிலீஸானப்ப அந்த பாடல்கள கேட்டு மக்கள் எல்லாரும் எப்டி ஆச்சரியப்பட்டாங்களோ, ரசிச்சாங்களோ அதே மாதிரி 3 படம் அனிருத்க்கு தமிழ் சினிமால சிவப்பு கம்பள வரவேற்ப குடுத்துச்சு. அவர் இசையமைக்க தனுஷ் பாட்டெழுதி பாடனு DNA கூட்டணி எல்லாரலயும் ரசிக்கப்பட்டுச்சு.

அதுக்கப்பறமா 2022 வரைக்கும் அடுத்த 10 வருசத்துல அனிருத் தொட்டதெல்லாம் ஹிட். ஒரு பக்கம் மியூசிக் போடுறது, இன்னொரு பக்கம் பாடுறதுனு இந்திய சினிமா முழுக்க பிரபலம் ஆகிட்டாரு.

அனிருத்தோட எல்லா பாட்டுமே ஹிட் ஆயிடும். அதுக்கு அவர் பண்ண வேண்டியது 2 விஷயம் தான். ஒன்னு அந்த பாட்டுக்கு அவர் மியூசிக் பண்ணியிருக்கனும். இல்ல அவர் பாடியிருக்கனும். இதுக்கே இப்டினா அவரே கம்போஸ் பண்ணி பாடின பாடல்கள் எல்லாம அதிரி புதிரி ஹிட். இன்னொரு முக்கியமான விஷயம் சந்தோசம், சோகம், வெறித்தனம், காதல் இப்படி எல்லா உணர்வையும் அவர் மியூசிக் மட்டுமில்லாம அவருடைய குரலும் நம்மகிட்ட கொண்டுவந்து சேர்க்கும்.

காதல் சோகத்துக்கு டேவிட் படத்துல வர ‘மெளனமான மரணம் ஒன்று’ , காதலுக்கு ‘தங்கமே உன்னத்தான்’ , சந்தோசத்துக்கு ‘டானு டானு டானு’, வெறித்தனத்துக்கு ‘போர் கண்ட சிங்கம்(EDM Version) இப்படி ஒவ்வொரு உணர்வுக்கும் இவருடைய பல பாடல்கள சொல்லிட்டே போகலாம்.

3 படத்துல காமெடியனா நடிச்ச சிவகார்த்திகேயன், அதுக்கு பிறகு தனுஷ் தயாரிப்புல எதிர் நீச்சல் படத்துல ஹீரோவா நடிக்குறாரு. அதுக்கு அனிருத் இசையமைக்குறாரு. அதுதான் அனிருத்க்கு 2வது படம். அப்போ சேர்ந்த அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணி அதுக்கு பிறகு இன்னைக்கு வரைக்கும் பல மியூசிக்கல் ஹிட் சாங்ஸ கொடுத்துட்டே இருக்கு. சிவகார்த்திகேயனோட அசுர வளர்ச்சில அனிருத் மியூசிக் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்னு.

தமிழ் சினிமால முன்னணி கதாநாயகர்களா இருக்கக் கூடிய ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் இப்படி எல்லாருக்கும் அனிருத் மியூசிக் போட்டாச்சு. இந்த நடிகர்கள் பேர சொல்லும் போதே ரஜினின்னா பேட்ட சாங் ‘தட்லாட்டம் தாங்க’, கமல்னு சொன்னாலே விக்ரம் தீம் சாங் ‘Once Upon A Time’ , விஜய்னா ‘வாத்தி கம்மிங் ஒத்தே’, அஜித்னா ‘ஆலுமா டோலுமா’னு அனிருத் மியூசிக்கும் சேர்ந்து நியாபகத்துக்கு வந்துடும்.

அனிருத் இசையமைச்ச, பாடிய பல பாடல்கள் யூட்யூப்ல பல மில்லியன் பார்வைகள் கடந்து போயிட்டு இருக்கு. பீஸ்ட் படத்துல இடம்பெற்ற ஹலமத்தி பாடல் சமீபத்துல 300 மில்லியன் பார்வைகள கடந்துருக்கு.

அதே மாதிரி தமிழ்நாட்டுல இன்னைக்கு நடக்குற வீட்டு விழாக்கள்ல இருந்து ஊர் திருவிழாக்கள், கல்யாண கச்சேரிகள்னு எல்லா இடத்துலயும் இந்த பாடல்கள் நிச்சயம் ஒலிக்கும். இதுதான் ராக் ஸ்டார் அனிருத்தோட வெற்றியின் அடையாளம்.

Article By MaNo