Cinema News Specials Stories

இசை இளவரசர் டி.இமான்!

ஆடாத கால்களும் ஆடும்! கேட்காத காதுகளும் கேட்கும் !! விசில் அடிக்காத வாய்களும் விசில் அடிக்கும்!!! இப்படி ஓர் நிகழ்வு நிகழுமானால், அது இசையின் இளவரசன் டி.இமான் இசையில் நிகழும்…!

டி.இமான் இசையமைப்பாளர் மட்டுமல்ல, சிறந்த பின்னணி பாடகரும் கூட அப்டினு எல்லாருக்குமே தெரியும். திரைப்படத்திற்கு இசையமைக்கவும் பாடல்களை இயற்றவும் அவருக்கு முதல் வாய்ப்பளித்தது குட்டி பத்மினி தாங்க, காதலே ஸ்வாசம் அப்படின்ற படத்துல டி.இமானுக்கு பாடல்களை இசையமைக்கவும், இயற்றவும் குட்டி பத்மினி வாய்ப்பு குடுத்தாங்க.

பிறகு தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரன் ஆல்பத்தில், இமானின் பணியால் ஈர்க்கப்பட்டு டி.இமானுக்கு இளைய தளபதி விஜயோட தமிழன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை குடுத்தார். இருந்தாலும் டி.இமானுக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு தான் பரவலாக அறிமுகம் கிடைத்தது. மிகக் குறைந்தக் காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசையமைத்தார் டி. இமான்

தமிழ் மட்டுமில்லாம கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி-னு பல மொழி திரைப்படத்திற்கு இசை அமைத்து வரும் இமான், சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தமானார். பிறகு எண்ணிலடங்கா விருதுகளை தன் வசப்படுத்தினார்.

டி.இமான் அப்டின்னாலே இந்த மாரி பாடல்கள் மட்டும்தானு நினைச்சுட்டு இருந்தவங்களுக்கு ஒரு Shock குடுத்தாரு பாருங்க Wow Youngsters மட்டுமல்லாமல் மழலைகளையும் கவர்ந்தார். அப்படி என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா போகன் படத்துல வர செந்தூரா… ஆமால்ல அப்படினு நீங்க நினைக்குறது எனக்கு புரிந்து.

இசை துறையில் மட்டுமல்லாமல் கனடா டொராண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழர்களுக்கான தூதராக நியமிக்கப்பட்டார். இப்போ நெறைய பேருக்கு டி.இமான பாக்கும்போது Doubt வந்துருக்கு, ஏன் இவ்ளோ Slim ஆனாங்கனு. டி.இமான் ஒரு இசையமைப்பாளர், பாடகர் இப்படினு ஒரு பக்கம் இருந்தாலும் அவர் ஒரு பயங்கரமான Foodie. அதனால உடல் எடை கூடிருச்சு.

So Weight Loss பண்ணும் போது ரொம்ப கஷ்டப்பட்டாராம். அட என்னங்க எல்லாரும் அதுக்கான Effort போடும் போது கஷ்டப்படத்தானே செய்வாங்க அப்படினு நீங்க நினைக்கலாம். அது என்னவோ உண்மைதா ஆனா டி.இமான் Feel பண்ணது புடிச்ச Food ah சாப்பிட முடியாதுனு.

பாருங்க முக்கியமான விஷயத்த சொல்ல மறந்துட்டேன்… நம்ம Suryan FM ஓட கேளுங்க Suryan FM அப்படின்ற Jingle-க்கு இசையமைச்சதும் டி. இமான் தாங்க. திரைப்பட பாடல்களுக்கு மட்டுமல்லாமல் ஆரம்ப காலத்துல Famous ஆன சீரியல்களுக்கு இசையமைச்சாங்க… இன்னும் சொல்லப்போனா இவர் இசையமைச்ச சீரியல்களின் இசைக்காகவே நிறைய பேர் சீரியல் பாக்க ஆரமிச்சாங்க.

So எல்லா ஜில்லாலையும் இவரோட பாட்ட தெறிக்க விட்டார், இசையின்மீது கொண்ட இவரின் விஸ்வாசம் இன்னும் பல உயரங்களை போய் தொட வாழ்த்துகள். இசை இளவரசர் டி.இமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article by RJ Maya