Cinema News Specials Stories

கமர்ஷியல் பிளாக்பஸ்டர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்!

KSRavikumar

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணம் வகுத்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான இயக்குநர். அவரைப் பற்றிய முக்கியமான தகவல்களை தற்போது பார்ப்போம்.

கே.எஸ்.ரவிக்குமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் விக்ரமனிடம் இணை இயக்குனராக பணி புரிந்தவர். தமிழில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் பக்கா கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்தவர். கேஎஸ் ரவிக்குமார் படம் என்றாலே தியேட்டருக்கு குடும்பம் குடும்பமாக படை எடுத்துச் செல்வார்கள். தான் இயக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு சில காட்சிகளில் இவர் தோன்றுவார்.

இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர்களில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு முக்கிய இடம் உண்டு. இவருடன் நெருங்கி பழகிய நடிகர் என்றால் அது சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தான். இதுவரை 10 படங்களில் இணைந்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்த முதல் திரைப்படம் முத்து. அதை தொடர்ந்து படையப்பா, அதன் பின் லிங்காவிலும் இணைந்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். முதல் முறை தெனாலி திரைப்படத்தின் மூலமாக தயாரிப்பாளர் ஆனார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முதல் படமான ‘புரியாத புதிர்’ 1990 ஆம் ஆண்டு வெளியானது. இதுவரை 44 திரைப்படங்களை இயக்கி உள்ளார். நடிகர் விஜய்யுடன் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்த ஒரே ஒரு படம் மின்சாரக்கண்ணா.

1999 ஆம் வருடம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய 5 திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டாமை படத்தில் விஜயகுமார் கேரக்டரில் நடிக்க முதலில் கே.எஸ்.ரவிக்குமார் அணுகிய நடிகர் சிவாஜி கணேசன்.

கதையின் நாயகனாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்த முதல் படம் மதில். அதை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா திரைப்படத்தை தயாரித்து அதிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் பரிணாமத்தில் இதுவரை முக்கிய பங்காற்றி வரும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By RJ Jebaraj