Cinema News Stories

கே.எஸ்.ரவிக்குமார் மகளின் வாழ்க்கை மாறிய அந்த நொடி!

K-S-Ravikumar

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் ‘மாலிகா ரவிக்குமார்’ சமீபத்தில் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார். நேர்காணலில் அவரைப் பற்றிய நிறைய புதுமையான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் என்பதை தாண்டி மாலிகா ரவிக்குமார் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பினோம். அப்போது அவர் கூறியதாவது, “நான் கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் என்பதே எனக்கான மிகப்பெரிய அடையாளம். இருந்தாலும் அதனைத் தாண்டி எனக்கான ஒரு அடையாளம் வேண்டுமென நினைத்து ஆரம்பித்த பயணம் தான் இந்த ‘Life Coaching’.

எடுத்த எடுப்பிலேயே இந்த பாதையில் நான் வந்துவிடவில்லை. ஆரம்பத்தில் Fashion Designer-ஆக வேண்டுமென நினைத்தேன். அதற்காக ஒருவரிடம் சேர்ந்து படித்து முடித்துவிட்டு தனியாக தொழில் தொடங்கினேன். ஆனால் அதே சமயம் நான் கருவுற்ற காரணத்தால் மற்ற எதிலும் கவனம் செலுத்தவில்லை. குடும்பம் தான் முதலில் முக்கியம் என அப்பா எப்போதும் கூறுவார்.

Maalica

எனக்கு Lockdown சமயத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சரியாக 12 நாட்களில் Lockdown. அந்த சமயத்தில் சரியாக எதுவும் செய்யமுடியவில்லை. Baby delivery, Postpartum depression & Covid anxiety இப்படி பல்வேறு காரணங்களால் மிகவும் உடைந்து போய் விட்டேன். அந்த சமயத்தில் தான் என்னை நம்பி ஒரு குழந்தை வந்துவிட்டது. இனி யாருடைய ஆறுதலையும் எதிர்பார்த்து நாம் வாழக்கூடாது என்று உணர்ந்தேன்.

ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்து இந்தியாவிலேயே சிறந்த Life Coach-களில் ஒருவரான பூஜா என்பவரை சந்தித்தேன். அவர்களிடம் சென்ற பின்னர் என்னுடைய வாழ்க்கையே மாறியது. Over depression, tension, panic attack என்று இருந்த நான் மிகவும் positive-ஆன மகிழ்ச்சியான பெண்ணாக மாறினேன்.

Maalica

பின்னர் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் என் வாழ்க்கையையே மாற்றியிருக்கிறேன். நன்றாக பேசுகிறேன். கஷ்டப்பட்ட சமயத்தில் பிரச்னைகள் குறித்த நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. நான் ஏன் ஒரு ‘Life coach’ ஆகக் கூடாது என்று எண்ணி இந்த பாதையில் வந்தேன். மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 800-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன். தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் Life coach என்பது பற்றி தெரியவில்லை. இது பிரச்னைகளை தீர்க்கக் கூடிய வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு புதுமையான விஷயம். தொடர்ந்து பிரச்னைகளில் சிக்கித் தவித்து வரும் பெண்கள் பலரது பிரச்னைகளையும் Life coach-ஆக சரி செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும் இது சம்மந்தப்பட்ட பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள்:

Article By MaNo