Cinema News Stories Trending

மாஸ்டர் 6 கோடி குட்டி ஸ்டோரி

தளபதி விஜயின் அறுபத்தி நான்காவது படமான மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் யூட்யூபில் இப்பாடல் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுவரை இப்பாடலை 6 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். அதுமட்டுமின்றி சுமார் 16 லட்சம் ரசிகர்கள் இப்பாடலை லைக் செய்து உள்ளனர்.

அனிருத் இசையில் அமைந்த இப்பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். இதுவரை வெளியான தமிழ் பாடல் லிரிக்ஸ் வீடியோக்களில் வேகமாக 6 கோடி views-ஐ பெற்ற பாடல் குட்டி ஸ்டோரி தான்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸை நோக்கி தளபதி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் குட்டி ஸ்டோரி பாடலின் இந்தப் புதிய சாதனை ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு சேர்த்து மாஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகமாகியுள்ளது.

இப்பாடல் விரைவில் 100 மில்லியன் views ஐ பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.