ஏன் மணி Sir G.O.A.T

Mani-Ratnam

பம்பாய் திரைப்படம் – மதக்கலவரம் நடக்கும், ஒரு சிறுவன் மட்டும் எங்க போகுறதுனு தெரியாம மாட்டிப்பார், அங்கு ஒரு திருநங்கை அவரை காப்பாற்றி அவர் சாப்பிட உணவு கொடுப்பாங்க,
“ஏன் எல்லோரும் சண்டை போட்டுகிறாங்க” என்று கேட்பார்,
“அவங்க ஹிந்து முஸ்லிம் பா..!”
அந்த பையன் சாப்பிட்டுக்கிட்டே “ஹிந்து னா என்ன? முஸ்லிம் னா என்ன?” அப்படின்னு கேப்பான், அதுக்கு அந்த திருநங்கை
“இரண்டும் கடவுளை சேருவதற்கான வழி”னு சொல்லுவாங்க,
“அப்புறம் ஏன் அடிச்சுக்கிறாங்க” அப்படின்னு கேப்பான். அதான் மணிரத்னம்… மன்னிக்கணும் மணி சார்..!

தனது பெரும்பாலான திரைப்படங்களில் குழந்தைகளின் பார்வையில் கதை சொல்வது அவரது தனிச்சிறப்பு. வசனங்களை குறைச்சுட்டு காட்சி மொழியில் கவிதை பாடும் அவர் திரைக் காட்சிகள். மணிரத்தினம் அவர்களுடைய திரைப்படங்களை 3 நொடி பார்த்தாலே, நிச்சயமாக இது அவருடைய படம் தான் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய முத்திரையை பதித்திருப்பார்.

Image

இன்றைக்கும், நாயகன் படம் பார்த்து எத்தனையோ பேர் சென்னைக்கு டைரக்டர் ஆகணும்னு கிளம்பி வருகிறார்கள். தமிழ் சினிமாவில், உங்களோட Role Model யாருனு, இயக்குனர் ஆக நெனைக்கிற யார்கிட்ட கேட்டாலும், எல்லோரும் முக்கியமா சொல்ற ஒரு பதில் மணி Sir…!

அவர் யார்கிட்டயும் அசிஸ்டெண்ட் டைரக்டரா பணிபுரிந்தது இல்லை, எந்த ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டிலும் சினிமா கற்றுக்கொள்ளவில்லை, இருந்தும் கடந்த 30 வருடங்கள் மட்டுமின்றி இன்னும் பல யுகங்களுக்கு மணி Sir திரைப்படங்கள்தான் திரைப் பாடங்கள்.

Image

பல்லவி அனுபல்லவி துவங்கி இவரது பயணம் பொன்னியின் செல்வன் வரை தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல உலக சினிமாவிற்குன் ஆச்சரியத்தை கொடுத்து கொண்டே இருக்கிறது. அவரைப் பற்றி பேசுவதற்கு கடலளவு விஷயங்கள் இருக்கு, எவ்வளவு புகழ்ந்தாலும் தகும், இருந்த போதும் அவர் போல நாமும் கொஞ்சம் சுருக்கமாகவே பேசலாம்… அவர் வாழும் இந்த தலைமுறையில் நாமும் வாழ்கிறோம் என்பதற்காகவே நாம் பெரும் செருக்கு அடையலாம்!

தமிழ் திரையுலகின் முக்கியமான அடையாளமான மணி Sir அவர்களுக்கு சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article by Roopan Kanna VP