இது மாஸ்டர் பொங்கல் !!!

திரையரங்குகளை தரமாக தயார் செய்து வைக்க நேரம் வந்துவிட்டது என்றே கூறலாம். தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பொதுவாக பொங்கலுக்கு வெளிவரும் படங்களின் மேல் ரசிகர்களுக்கு வேற லெவல் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கம். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தளபதி விஜய் போன்ற ஒரு மாஸ் Hero-வின் திரைப்படத்தை திரையில் காண ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நற்செய்தியை தளபதி ரசிகர்கள் தாறு மாறாக கொண்டாடி வருகின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேல் இப்படத்தை திரையில் காண திரை மீதி விழி வைத்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது ஒரு உற்சாகமான Relief கிடைத்துள்ளது. ஒரு மாஸான Update காத்திருக்கிறது என நேற்றே மாஸ்டர் படக்குழுவினர் ஒரு வீடியோவை வெளியிட்டனர். அது ரிலீஸ் தேதியை குறித்த Update-ஆக தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்து வைத்திருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏமாற்றமில்லாத Update-ஆக ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துவிட்டனர்.

Image

2021-ம் ஆண்டின் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 13-ம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளிவரவுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்குவில் ஜனவரி 13-ஆம் தேதியும், ஹிந்தியில் 14-ஆம் தேதியும் மாஸ்டர் வெளியிடப்படவுள்ளது. மூன்று மொழிகளில் வெளியாக இருப்பதால், இப்படம் இந்திய அளவில் ஒரு மாஸ் மெகா ஹிட் திரைப்படமாக அமைய வாய்ப்புள்ளது.

இந்த பொங்கல் மாஸ்டர்-ன் பொங்கலாக தளபதி ரசிகர்களுக்கு அமையும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதற்கு முன் பொங்கலுக்கு வெளிவந்த ஜில்லா, போக்கிரி, நண்பன், காவலன் உள்ளிட்ட விஜய் படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களாகவே இருந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மாஸ்டர் படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

About the author

shafin

உங்களில் ஒருவன்