Cinema News Stories

‘நவரசா’ உருவாக இது தான் காரணமா ??? 😮

ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது “நவரசா” Anthology திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ. வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி OTT தளத்தில் இந்த Anthology திரைப்படம் ஒன்பது பாகங்களாக வெளிவரவிருக்கிறது.

இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால் திரைத் துறையைச் சார்ந்த பல தொழில்நுட்ப கலைஞர்களும், பல தொழிலாளிகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சபகேசன் இருவரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த Anthology திரைப்படத்தை தயாரித்து, அதில் இருந்து வரும் வருமானத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதற்கு தமிழ் சினிமாவை சேர்ந்த பல நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முன்வந்து ஆதரவளித்தனர்.

அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நவரசா திரைப்படத்தின் ஒன்பது பாகங்களும் படமாக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் தங்களது தனித்துவமான கலைப் பணியினால் மக்கள் மனதில் தங்களுக்கென தனி இடத்தை பிடித்த 9 பிரபலங்கள் இணைந்து நவரசாவை உருவாக்கியுள்ளனர்.

Image

மனிதர்களின் ஒன்பது உணர்வுகளான கருணை, நகைச்சுவை, ஆச்சரியம், அருவருப்பு, அமைதி, கோபம், பயம், தைரியம், காதல் ஆகியவற்றை ஒன்பது பாகங்களாக ஒன்பது வெவ்வேறு கதைகள் மூலம் மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த நவரசா Anthology உருவாகியுள்ளது. பிஜாய் நம்பியார், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், அரவிந்த் சாமி, ரதீந்திரன் பிரசாத், சர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இந்த ஒன்பது பாகங்களை இயக்கியுள்ளனர்.

இந்த Anthology படைப்பின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்து வந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு Teaser, அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். இந்த teaser-ல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை பார்ப்பவர்களை மெய் மறக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், ரேவதி, டெல்லிகணேஷ், யோகிபாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்த teaser வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

நவரசா Anthology-ன் 9 பாகங்களுடைய தலைப்புகளையும். அதில் நடிக்கும் நடிகர்களின் பட்டியலையும் கீழே காணுங்கள்.

தலைப்பு – எதிரி (கருணை)
இயக்குநர் – பெஜோய் நம்பியார்
நடிகர்கள் – விஜய் சேதுபதி , பிரகாஷ் ராஜ், ரேவதி

Image

தலைப்பு – சம்மர் ஆஃப் 92 ( நகைச்சுவை )
இயக்குநர் – ப்ரியதர்ஷன்
நடிகர்கள் – யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு

Image

தலைப்பு -புராஜக்ட் அக்னி (ஆச்சர்யம்)
இயக்குநர் – கார்த்திக் நரேன்
நடிகர்கள் – அர்விந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா

Image

தலைப்பு – பாயாசம் ( அருவருப்பு )
இயக்குநர் – வசந்த் S சாய்
நடிகர்கள் – டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன், செல்ஃபி கார்த்திக்

Image

தலைப்பு – அமைதி ( அமைதி )
இயக்குநர் – கார்த்திக் சுப்புராஜ்
நடிகர்கள் – சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண்

Image

தலைப்பு – ரௌத்திரம் ( கோபம் )
இயக்குநர் – அர்விந்த் சுவாமி
நடிகர்கள் – ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக், கீதா கைலாசம்

Image

தலைப்பு – இண்மை ( பயம் )
இயக்குநர் – ரதீந்திரன் R பிரசாத்
நடிகர்கள் – சித்தார்த், பார்வதி திருவோர்து

Image

தலைப்பு – துணிந்த பின் (தைரியம்)
இயக்குநர் – சர்ஜூன்
நடிகர்கள் – அதர்வா, அஞ்சலி, கிஷோர்

Image

தலைப்பு – கிடார் கம்பியின் மேலே நின்று ( காதல் )
இயக்குநர் – கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகர்கள் – சூர்யா, ப்ரயகா ரோஸ் மார்டின்

Image

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ரிலீஸ் தேதி அறிவிப்பு teaser-ஐ இயக்குனர் பரத் பாலா இயக்கி வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நவரசா Anthology திரைப்படத்தின் teaser-ஐ கீழே காணுங்கள்.