“நெஞ்சம் மறப்பதில்லை” Sneak Peek இதோ !!!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பிதல்லை’ படத்தை திரையில் காண வருடக் கணக்கில் காத்திருந்த ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அப்படம் வருகிற மார்ச் 5-ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் Sneak Peek தற்போது Youtube-ல் வெளியாகி Trend ஆகி வருகிறது.

பொதுவாக செல்வராகவனின் படங்களில் கதைக்கருவும், கதாபாத்திரங்களும் சற்று வித்தியாசமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் இப்படத்தில் நடிக்கும் அனைவரது கதாபாத்திரமும் மக்கள் மனதில் பதியும் கதாபாத்திரங்களாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் வகையில் இந்த Sneak Peek வீடியோ அமைந்துள்ளது.

குறிப்பாக இந்த Sneak Peek-ல் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் “டேய் சும்மா இருடா” வசனம் படம் வெளியாவதற்கு முன்னரே Meme Template ஆக மாறிவிட்டது. இந்த வீடியோவை வைத்து பார்க்கும் போது எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் ஒரு Gangster கதாபாத்திரத்தில் நடித்திருப்பது போல தெரிகிறது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா என இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை இப்படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என சொல்லலாம். இப்படத்தின் பாடல்கள், படம் வெளியாவதற்கு முன்னரே பலரின் Playlist-ல் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் என்றும் ரசிகர்களின் நெஞ்சம் மறக்காத வெற்றிப்படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படத்தின் Sneak Peek வீடியோவை கீழே காணுங்கள்.