Cinema News Stories

சுருளியின் சுவாரசியமான “நேத்து” Unplugged !!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “ஜகமே தந்திரம்” திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் “நேத்து”பாடலை தனுஷ் எந்த பின்னணி இசையும் இன்றி பாடும் Unplugged வீடியோ வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணின் இசையில் தனுஷ் பாடியுள்ள “நேத்து”பாடல் வெளியானத்திலிருந்தே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் மெலடி பாடலாக வலம் வருகிறது. இந்நிலையில் இப்பாடலின் இந்த Unplugged version இப்பாடலின் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. தனுஷின் மென்மையான குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு தனுஷே வரிகளையும் எழுதியுள்ளார்.

இப்படம் ஜூன் 18-ல் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை இந்த தனுஷ் பாடும் Unplugged Version மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இது மட்டுமின்றி இன்று காலை ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Image

சோழர் பரம்பரையிலிருந்து ஒரு லண்டன் தாதாவாக உருவெடுக்கும் சுருளியின் ஆட்டத்தை காண ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜகமே தந்திரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மெகாஹிட் படமாக அமைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தனுஷ் பாடிய “நேத்து”பாடலின் Unplugged Version-ஐ கீழே காணுங்கள்.